சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படியும் பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.. தென் சென்னை எம்.பி ஜெயவர்தன் புது முயற்சி

Google Oneindia Tamil News

சென்னை: வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர உள்ளது. இதனிடையே, வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் அதிமுக எம்.பி., ஜெ.ஜெயவர்தன்.

தென் சென்னை லோக்சபா தொகுதி எம்.பியான டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் (அதிமுக) ஏற்பாட்டில் Enviro soldiers என்ற அமைப்பை உருவாக்கி அதன் வழியே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் நடத்தப்பட்டது.

MP J. Jayavardhan against plastic usage

பொதுவாகவே விழிப்புணர்வு பிரசாரம் என்றால் பதாகைகள், பேரணி, கோஷம், பேனர் போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால், அதை மாற்றி அமைத்து இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ப விழிப்புணர்வு செய்தியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று புதிய கோணத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.

இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்றார்போல் பெப் இசை, வாய்ஸ் பீட், பிளாஷ் மாப், நிகழ்ச்சி என மக்களை ஈர்த்து அதன் வாயிலாக பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஜெ.ஜெயவர்தன் எம்.பி. விளக்கினார்.

வீட்டு உபயோகத்தில் துணி பைகளின் அவசியம் குறித்தும் மாசு கட்டுபாட்டை கட்டுபடுத்த வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் அவசியம் குறித்தும் விளக்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் துணி பை மற்றும் மர கன்றுகளை வழங்கினார்.

இதுவரை இவர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு மரகன்றுகளையும் வழங்கி வருகிறார் என்பது குறிபிடதக்கது.

எஸ்.டி.தர்மேஷ் குமார்- மாநில பொருளாளர் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, லோகேஷ் தமிழ்ச் செல்வன், கார்த்திக் கமல கண்ணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

English summary
South Chennai MP J. Jayavardhan of AIADMK takes initiative, against plastic usage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X