சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரேஸில் முந்துகிறார் ஜோதிமணி.. அடிக்க போகிறது யோகம்.. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாகிறாரா?

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக ஜோதிமணி தேர்வாகலாம் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஜோதிமணிக்கு அடிக்க போகிறது யோகம்.. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக எம்பி ஜோதிமணியை நியமிக்க டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் பரபரக்கின்றன.

மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஜான்சி ராணியின் பதவி காலம் முடிவடைந்துள்ளது. எனவே, புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் எடுத்து வருகிறது.

மகிளா காங்கிரஸ் தலைவர் பதவிக்காக கடுமையான போட்டி நிலவுகிறது... இதில், ஜோதிமணி, ஹசீனா சையத், சுமதி அன்பரசு, வழக்கறிஞர் சுதா, உள்ளிட்ட பலரும் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

"நான் தொப்பி அணியாத முஸ்லீம்ன்னு சொன்னீங்களே.. ஒரு அறிக்கை கூட இல்லயே ஐயா".. ட்விட்டர்வாசிகள் கேள்வி

மூத்த நிர்வாகிகள்

மூத்த நிர்வாகிகள்

மகிளா காங்கிரசின் தமிழக மேலிட பொறுப்பாளர் சவுமியாதான் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நேர்முக தேர்வு நடத்தியிருந்தார்.. அதில் 10 பேரை தேர்வு செய்து அவர்களை டெல்லி வரவழைத்திருந்தார்... அவர்களுக்கு டெல்லியில் மகிளா காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் நேர்முக தேர்வு நடத்தினர்... இதில் இருந்து ஒருவரை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

ப.சிதம்பரம் ஆதரவாளர்

ப.சிதம்பரம் ஆதரவாளர்

அந்த வகையில் 2 பேரின் பெயர்கள் பலமாக அடிபடுகிறது.. ஒருவர் ஹசீனா சையத், மற்றொருவர் எம்பி ஜோதிமணி ஆவார். இதில், ஹசீனா பெயர் பிரதானமாக உச்சரிக்க காரணம், அவர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்... ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். மூத்த தலைவரின் ஆதரவு என்பதால் நேரடியான தேர்வுக்கு வாய்ப்பு இருக்கும் என்ற பேச்சு உள்ளது.

ஜோதிமணி

ஜோதிமணி

அதேபோல, அவருக்கு டஃப் கொடுப்பவர் ஜோதிமணி.. அரசியல் அனுபவம் பெற்றவர்.. கடுமையான உழைப்பாளி.. ராகுல்காந்தியுடன் நேரடி தொடர்பு வைத்து, முக்கிய பிரச்சனைகளை ஆலோசிப்பவர்.. அதனால் ஜோதிமணியின் பெயர் சற்று பலமாகவே அடிபடுகிறது... கடந்த காலங்களில் மகிளா காங்கிரசை சரியாகவும், துரிதமாகவும் கொண்டு சென்றவர் விஜயதரணிதான்.. அவரைபோலவே ஒருவரைதான் அடுத்த மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவாகி உள்ளது.

பட்டியல்

பட்டியல்

அதன்படிதான், ஜோதிமணியை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முன் வைத்துள்ளனர். அதற்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவியும் இசைவு தெரிவித்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.. இன்னும் 15 நாட்களில் தமிழக மகிளா காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அதில் ஜோதிமணிக்குதான் யோகம் அடிக்கும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

மகிளா தலைவி யார்?

மகிளா தலைவி யார்?

ஆனால், யார் தலைவியாக நியமிக்கப்பட்டாலும் சரி, இப்போதுள்ள காங்கிரஸ் சூழல் மிக மோசமாக உள்ளது.. அதற்கு டெல்லி தேர்தல் முடிவு அன்று, குஷ்பு பதிவிட்ட ட்வீட்களே சாட்சி.. எனவே அதல பாதாளத்தில் காங்கிரஸ் உள்ளது.. கூடுதல் விறுவிறுப்பு தேவை.. இளைஞர்கள் எழுச்சி தேவை.. குறிப்பாக வாரிசு அரசியல், கோஷ்டி பூசல்கள்.. உள்ளடி விவகாரங்கள் போன்ற சமாச்சாரங்களை தூக்கி தூரமாக போட்டுவிட்டு.. கட்சியை பலப்படுத்த வீர்யமிக்க தலைவர் தேவை.. பெண்களை திரட்டி வலுப்படுத்த துடிப்பான பெண் தலைவி தேவை.. அதனால் தமிழக மகிளா காங்கிரசுக்கு யார் தேர்வானாலும் சரி... இதையெல்லாம் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும் என்பது மட்டும் தெளிவு!

English summary
mp jothimani chance to select for tn mahila congress president post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X