• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஜோதிமணியை இதற்கா ஜெயிக்க வைத்தோம்? சீறும் உடன்பிறப்புகள்..! நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த ஜெயலலிதாவை பாராட்டி ஜோதிமணி போட்ட ட்வீட், பல்வேறு சர்ச்சைகளையும், அதிருப்திகளையும் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.. இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களிலும் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரமுகர்கள், விஐபிக்கள், தங்களது அஞ்சலியை பதிவு செய்திருந்தனர்..

நாடாளுமன்றம்: புயலை கிளப்பும் நாகாலாந்து பொதுமக்கள் படுகொலை- விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்! நாடாளுமன்றம்: புயலை கிளப்பும் நாகாலாந்து பொதுமக்கள் படுகொலை- விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

பதிவு

பதிவு

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார்..
அதில், "ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் தனியொரு பெண்ணாக நின்று போராடி வெற்றி பெற்றவர். அவரது போராட்டம் அவரது தனிப்பட்ட போராட்டம் மட்டுமல்ல. பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்த, ஒரு பெண்ணின் கதை. அவருக்கு எனது அன்பும், அஞ்சலியும்" என்று பதிவிட்டிருந்தார்.

விவாதங்கள்

விவாதங்கள்

இந்த பதிவுதான் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும், பல்வேறு விவாதங்களையும் சோஷியல் மீடியாவில் எழுப்பியது.. திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் அங்கம் வகித்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில் அதிமுகவை சேர்ந்த ஜெயலலிதாவுக்கு ஜோதிமணி அஞ்சலி தெரிவித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர்... இதைதவிர இது இரு வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியது.

 இந்திரா காந்தி

இந்திரா காந்தி

இந்தியாவின் பெரும் அரசியல் தலைவராக இந்திரா காந்தி விளங்கிய நிலையில், வேறொரு பெண் தலைவருக்கு அஞ்சலியா? என்று சிலர் கேள்வி எழுப்பினர்.. காங்கிரஸ் கட்சியை மதிக்காமல் ஜெயலலிதா செயல்பட்டு அஞ்சலி தெரிவிப்பது ஏன்? இதே A 1 குற்றவாளி தான் உங்கள் தலைவர் சோனியாவை பற்றி தரைக்குறைவாக பேசினார் . அதை பற்றி உங்களின் கருத்து என்னவோ? தனியொரு பெண் எதற்காக உடன்கட்டை ஏற நினைத்தார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம்?

தம்பிதுரை

தம்பிதுரை

இரண்டு முறை வெற்றி பெற்ற தம்பித்துரையை மாற்றி ஜோதிமணி அவர்களை வெற்றி பெற வைத்த தொகுதியின் வாக்காளன் என்கிற முறையில் உள்ளபடியே வெட்கப்படுகிறேன்..வேடசந்தூர் அதிமுவினர் உங்களை சமூகவலைதளத்தில் கேவலப்படுத்தி சித்தரித்தபோது எதிர்த்து சண்டை போட்ட திமுகவினர் பலரில் நானும் ஒருவன்.. அதற்காக வெட்கப்படுகின்றோம்" என்று எதிர்ப்பு பதிவுகள் ஏராளமாய் குவிந்துவிட்டன.

ஆதரவு

ஆதரவு

மற்றொரு பக்கம், ஜெயலலிதா ஒரு பெண் ஆளுமை என்பதால், ஜோதிமணி இப்படி ஒரு பதிவை போட்டிருக்கலாம்.. கருத்துரிமை அனைவருக்குமே உள்ளது.. மறைந்த தலைவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது தவறா? சூழ்ச்சிகள், வஞ்சகங்கள், துரோகங்கள் நிறைந்த அரசியலில் ஜெயலலிதா அவைகளை துணிவுடன் கையாண்ட விதம், ஒரு பெண் அரசியல்வாதி என்ற முறையில் ஜோதிமணியை கவர்ந்திருக்கலாம்.. அவ்வளவு ஏன்? ஜெயலலிதா இறந்தபோது, அவருக்காக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிடவில்லையா? எனவே, ஜோதிமணியின் ட்வீட்டை பொதுவாகவே பார்க்கலாம் என்றும் இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.

 ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

இப்படி இருவேறு கருத்துக்களுடன் ஜோதிமணியின் பேஸ்புக் தளம் தகித்தாலும், காங்கிரஸ் தரப்பு அப்செட்டாக உள்ளதாம்.. ஏற்கனவே ஜோதிமணியின் சமீபகால செயல்பாடுகளில் மேலிட தலைவர்களுக்கு அதிருப்திகள் சூழ்ந்து வருவதாக கூறப்பட்டது.. திமுகவை விமர்சித்தது, கலெக்டர் ஆபீசில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை மறைமுகமாக ட்விட்டரில் விமர்சித்தது, போன்றவைகளை எல்லாம் கட்சி அவ்வளவாக ரசிக்கவில்லை.. இப்போது ஜெ.வை புகழ்ந்து ட்வீட் போட்டது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறதாம். அந்த கொந்தளிப்பு திமுகவிலும் உணர முடிந்ததாக கூறப்படுகிறது.

English summary
MP Jothimani posted jayalalitha memorial post in fb and controversies on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X