சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன சொல்ல வர்றீங்க தமிழிசை.. எங்க வேலையை நாங்க பார்க்கறோம்.. ஜோதிமணி நறுக் பதிலடி

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட்டுக்கு எம்பி ஜோதிமணி பதிலடி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Jyothimani slams Tamilisai | தமிழிசை பதிவுக்கு ஜோதிமணி நறுக் பதிலடி- வீடியோ

    சென்னை: "என்ன சொல்ல வர்றீங்க தமிழிசை.. நாங்க எங்க வேலையை பார்க்கறோம்.. நீங்க துணையா மட்டும் நில்லுங்க" என்று நறுக்கென பதிலடி தந்துள்ளார் கரூர் எம்பி ஜோதிமணி!

    பொதுவாகவே, பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகைதான்... காலா காலத்துக்கும் ஏழரைதான். இந்த கட்சி தலைவர்கள் ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி விட்டு, கிண்டல் கேலி என விமர்சனம் செய்து கொள்வார்கள்.

    அந்த வகையில், எப்போதெல்லாம் சாக்கு கிடைக்குமோ அப்போதெல்லாம் ஒரு சொட்டு வைத்து நக்கல் அடித்துவிட்டு போவார் கரூர் ஜோதிமணி. அதற்கு சரியான பதிலடியை திருப்பி தந்தே விடுவார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனும்!

    தமிழிசை

    தமிழிசை

    பெரும்பாலும் இந்த சண்டை ட்விட்டரில்தான் நடக்கும். இதுக்கு டைம் எல்லாம் கிடையாது. இவ்வளவு நாள் கொஞ்சம் ஓய்வில் இருந்தவர்கள் திரும்பவும் ஆரம்பித்துள்ளார்கள். இதில் தவறு தமிழிசை பக்கம்தான். நேற்று அவர் பதிவிட்ட ட்வீட் அப்படி இருந்தது.

    இழப்பு??

    "கார்த்தி. சிதம்பரம்-பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு.. கலாநிதி வீராசாமி - ராஜ்நாத் சிங்கிடம் மனு.. டிஆர்பாலு ரயில்வே மேலாளரிடம் மனு! தயாநிதி தென்னக ரயில் ஆபிசில் மனு! அமேதியில் அமைச்சர் ஸ்மிதிராணி ஒரே மாதத்தில் பலகோடி மதிப்பில் திட்டங்களை துவக்கி அசத்தல்!பாஜகவை தோற்கடித்த தமிழகம்? இழப்பு???" என்று பதிவிட்டு இருந்தார்.

    கண்டனம்

    கண்டனம்

    அதாவது, தமிழகம் சார்பாக எம்பிக்கள் கோரிக்கை மனு கொடுப்பதையே நக்கல் அடித்து ட்வீட் போட்டிருந்தார். தமிழிசையா இப்படியெல்லாம் ட்வீட் போட்டுள்ளார், தமிழக நலனுக்காகத்தானே மனுக்கள் தரப்படும்? அதை யார் தந்தால் என்ன, எந்த கட்சியை சேர்ந்த எம்பிக்கள் தந்தால் என்ன? என்று பல தரப்பிலும் மக்கள் கேள்வி எழுப்பினர்.

    மக்கள்தான் முக்கியம்

    இதைதான் ஜோதிமணியும் ட்வீட் போட்டு கேட்டுள்ளார். அதில், "என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழிசை? தமிழக மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உரிமையும், திட்டங்களும் கிடைக்காது என்றா? அரசும், மக்கள் பிரதிநிதிகளும் அனைவருக்கும் பொதுவானவர்கள். நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம். நீங்கள் துணை நில்லுங்கள். கட்சிகளைவிட மக்களும், தேசமும் முக்கியம்" என்று பதிவிட்டுள்ளார்.

    பாராட்டலாமே?

    பாராட்டலாமே?

    ஜோதிமணியின் இந்த கருத்து 100 சதவீதம் சரியானதே.. மத்திய அரசு நமக்கு நல்லதை செய்கிறதோ இல்லையோ.. அதற்கான முயற்சியிலும் ஈடுபடும் எம்பிக்கள் யாராக எடுத்தாலும், என்ன கட்சியில் இருந்தாலும் அவர்களை மனசார பாராட்டலாமே!

    English summary
    Karur MP Jothimani has criticized BJP TN Leader Tamilisai Soundarajans tweet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X