சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மதவெறி" பாஜகவுக்கு தமிழ் வரலாறெல்லாம் தெரியாது.. ராஜராஜ சோழன் இந்து அல்ல.. தமிழ் பேரரசன்.. ஜோதிமணி

Google Oneindia Tamil News

சென்னை: ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆதரவு தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறனின் கருத்துக்கு பாஜகவினரும் இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வரும்நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் ராஜ ராஜ சோழன் இந்து அல்ல என தெரிவித்து பரபரப்பை கூட்டியுள்ளார்.

இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ராஜராஜ சோழன் ஒரு தமிழ் பேரரசன். நம்பிக்கையில் சைவர். தமிழில் சங்க, சைவ,வைணவ இலக்கியங்கள் உண்டு.

இது ராகுலின் மருமகள்.. பாஜகவின் அழுகிப்போன கேவலமான மனநிலை! நிர்மலை வருத்தெடுத்த ஜோதிமணி இது ராகுலின் மருமகள்.. பாஜகவின் அழுகிப்போன கேவலமான மனநிலை! நிர்மலை வருத்தெடுத்த ஜோதிமணி

இந்து இலக்கியம்

இந்து இலக்கியம்

இந்து இலக்கியம் என்று எதுவும் இல்லை. பாஜகவிற்கு தமிழக வரலாற்றைப் பற்றி எவ்வித அறிவும் , அக்கறையும் இல்லை. மதவெறி மட்டுமே பிரதானம். சினிமா உட்பட எந்தக் கலை வடிவமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. இயக்குனர் திரு. வெற்றிமாறன் அவர்களின் கருத்து சரியானதே." எனவும் கூறியிருந்தார்.

விசிக தலைவர்

விசிக தலைவர்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் விழாவில்தான் வெற்றி மாறன் ராஜ ராஜ சோழன் குறித்து பேசியிருந்தார். இவரது கருத்து எச் ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். சக இயக்குநரான பேரரசுவும் கூட வெற்றி மாறனுக்கு எதிரான கருத்தையே தெரிவித்திருந்தார்.

கருணாஸ்

கருணாஸ்

இந்த நிலையில் நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் நேற்றைய தினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து?ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது.

 இந்து அரசன் இல்லை

இந்து அரசன் இல்லை

இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள் .இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் குறிப்பிட்டிருந்தார். ராஜராஜ சோழனை இந்து அரசனாக்கி தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறிப்பாக வெற்றி மாறன் கூறியது உண்மையானது என்றும் ராஜராஜ சோழனை இந்து மன்னர் என கூறுவது தமிழக அறத்திற்கே எதிரானது என்றும் கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ராஜராஜ சோழன் இந்து அரசனா என்பது குறித்து ட்விட்டர் தளங்களிலும் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

English summary
Congress MP Jothimani supports Director Vetrimaran in Rajaraja Cholan row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X