• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"நேரு Vs மோடி".. ஜோதிமணிக்கு வந்த திடீர் "டவுட்".. வரிந்து கட்டிக் கொண்டு வந்த பாஜகவினர்..!

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள்.. ஆனால், பாருங்க எம்பி ஜோதிமணிக்கு இன்றைய பிரதமர் மோடி குறித்து ஒரு டவுட் வந்துள்ளது.. தன்னுடைய சந்தேகத்தை ட்வீட்டாகவும் பதிவிட்டுள்ளார்..!

கரூர் எம்பி ஜோதிமணியை பொறுத்தவரை துணிச்சலானவர்.. தனக்கு தவறு என்று மனசில் பட்டத்தை டக்டக்கென ஓபனாகவே பேசி உடைத்துவிடுவார்.

அந்த வகையில், பிரதமர் மீதான தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்க ஒருபோதும் தயங்கியதில்லை.. டிவி, ட்வீட்கள், பேட்டிகள், என எந்த தளமாக இருந்தாலும், அங்கே மத்திய அரசுக்கு எதிரான வலுவான கருத்துக்களை எடுத்து வைப்பார்.

 எந்த மாநிலத்திலும்.. பழுதான இ.வி.எம் மெஷினில்.. தாமரைக்கே ஓட்டு விழுவது ஏன்?.. ஜோதிமணி நச் கேள்வி! எந்த மாநிலத்திலும்.. பழுதான இ.வி.எம் மெஷினில்.. தாமரைக்கே ஓட்டு விழுவது ஏன்?.. ஜோதிமணி நச் கேள்வி!

தடுப்பூசி

தடுப்பூசி

"ஆடம்பர திட்டங்களை விடுத்து, கொரோனா தடுப்பூசி உற்பத்தியை பெருக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்றும், "பத்திரிகையாளர் சந்திப்புகளை கண்டு பயப்பட வேணாம்.. தேவையில்லை. கேள்விகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். அதுவே பிரதமருக்கு அழகு!" என்றும் ஜோதிமணி சொன்னது நினைவுகூரத்தக்கது.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இது எல்லாவற்றிற்கும் மேலாக, "நடந்து சென்று கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், பிரதமர் மோடி மீது கல்லெடுத்து எறிவார்கள்" என்று ஜோதிமணி பேசியது டெல்லி வரை பரவியதையும் மறக்க முடியாது. இந்நிலையில்தான் மறுபடியும் பிரதமரை சீண்டி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் ஜோதிமணி.. அதில், "ஒருவேளை நேருவுக்கு பதிலாக மோடி இந்தியாவின் முதல் பிரதமர் ஆகியிருந்தால் இந்தியா என்கிற தேசம் இப்பொழுது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

பதிலடி

பதிலடி

ஜோதிமணிக்கு எதற்காக இப்படி ஒரு டவுட் வந்தது என்று தெரியவில்லை. ஆனால், பலரும் திரண்டு வந்து அவரது சந்தேகத்தை போக்கும் வகையில் பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. அக்கா, இந்தியா என்று ஒரு தேசமே இருந்திருக்காது.. ஒன்றும் பயப்படாதீங்க.. அப்படியே இருந்திருந்தால், இந்தியாவுக்கு பதிலாக, அம்பானி நாடு, அதானி நாடு என்று ஏதாவது ஒரு நாட்டின் பெயரில் அடிமைகளாக இருந்திருப்போம்.. என்று பதிலளித்து வருகிறார்கள்.

 சிந்தனை

சிந்தனை

மேலும் சிலரோ, "அக்கா, எனக்கும் இதே சிந்தனை வந்தது.. இவ்வளவு கட்டமைப்பு இருந்தும் இவர்களால் நாட்டை வழி நடத்த தெரியவில்லை.. ஆங்கிலேயர் விட்டு சென்ற போது இவர்களிடம் ஆட்சி இருந்திருந்தால்... உலக வரைபடத்தில் இந்தியா என்ற தேசமே இல்லாமல் போயிருக்கும்".. என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ட்வீட்

ட்வீட்

இந்நிலையில், கொஞ்ச நேரத்தில் ஜோதிமணி மறுபடியும் ஒரு ட்வீட் போட்டார்.. அதில், "நேரு யாரென்று தெரியாத பிஜேபியினருக்கு எளிதாக புரியும்படி சொல்கிறேன்... இந்தியாவில் மோடி அழித்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்" என்று பதிவிட்டார்.

மோடி

மோடி

இந்த பதிவை பார்த்ததும், இதற்கும் சிலர் பதிலளித்து வருகின்றனர்.. "மோடிஜியை பற்றி சரிவர தெரியாத காங்கிரஸ்காரர்களுக்கு புரியும்படி சொல்கிறேன்... நேரு முதல் இந்திரா, ராஜிவ் வரை தொட்டுக் கூடப் பார்க்க பயந்த காஷ்மீரின் 370 வது சிறப்பு பிரிவை துச்சமென தூக்கி எறிந்து காஷ்மீரும் இந்தியர்களுக்குத் தான் என்ற உரிமையைப் பெற்றுத் தந்தவர் மோடிஜி" என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.. மோடி Vs நேரு என்ற விவாதம் சூடுபிடித்திருப்பதால், ஜோதிமணியின் ட்விட்டரே பிஸியாக இருக்கிறது..!

English summary
MP Jothimani tweeted about PM Modi and Jawaharlal Nehru
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X