சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மக்களின் ஆதரவை பெற முடியாத கும்பல்... சுயமரியாதை இல்லாத அரசு... கனிமொழி சீற்றம்!!

Google Oneindia Tamil News

சென்னை: ''தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது'' என்று தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோயம்புத்தூரில், சுந்தராபுரத்தில் இருக்கும் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிச் சாயம் வீசிச் சென்றனர். இதையடுத்து அங்கு திக, திமுக, பெரியார் தொண்டர்கள், விசிக கட்சியினர், மதிமுக தொண்டர்கள் கூடினர். காவிச் சாயம் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சட்டம் ஒழுங்கு கமிஷனர் ஜி. ஸ்டாலின் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

kanimozhi

பெரியார் சிலை அவமதிப்புக்கு தனது ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்து இருக்கும் திமுக எம்.பி. கனிமொழி, ''தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து கோயம்புத்தூரில் இருக்கும் 5 பெரியார் சிலைகளுக்கும், அம்பேத்கர் சிலைக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. என். கார்த்திக் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை பெரியார் சிலை அவமதிப்பு.. யாராக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்- முதல்வர் எச்சரிக்கை

English summary
MP Kanimozhi demands strict action against those who smear Periyar statue with saffron paint at Coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X