சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐயா.. தருமபுரி தேர்தல் களத்தில் வீரன் யார்?.. நயவஞ்சகர்கள் யார்?.. ராமதாஸுக்கு திமுக எம்பி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: தருமபுரி தேர்தல் களத்தில் வீரன் யார், நயவஞ்சகர்கள் யார் என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மக்களவை தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை எதிர்த்து போட்டியிட்ட திமுக எம்பி செந்தில்குமார் கடும் போட்டியில் வெற்றி கண்டார். இந்த நிலையில் அவர் திமுகவை விமர்சனம் செய்யும் ராமதாஸை எதிர்த்து பதிலளித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல்களில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்றது. தனது கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

போர்வெல்லில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் இப்படி மீட்கலாம்.. திண்டுக்கல் தர்மராஜ் தரும் யோசனை!போர்வெல்லில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் இப்படி மீட்கலாம்.. திண்டுக்கல் தர்மராஜ் தரும் யோசனை!

டுவிட்டர் பக்கம்

இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள்.

 தேர்தல் களம்

தேர்தல் களம்

விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்! என தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி செந்தில்குமார்

இதற்கு திமுக எம்பி செந்தில்குமார் பதிலளித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் போர்த் தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள்.

 தேர்தல் களத்தில் வீரன் யார்

தேர்தல் களத்தில் வீரன் யார்

தர்மபுரி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்! என்று விமர்சனம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக ராமதாஸுக்கு சரியான கவுன்ட்டர்களை கொடுத்து வருகிறார் செந்தில்குமார்.

English summary
DMK MP Senthilkumar gives befitting reply to PMK founder Ramadoss who celebrates the victory of ADMK in Nanguneri and Vikkrawandi assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X