சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனடா பிரதமரே விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிட்டார்.. நம்ம முதல்வர் எதுவுமே சொல்லலியே.. தமிழச்சி கேள்வி

பாமக போராட்டம் குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "கனடா பிரதமர் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துட்டார்.. ஆனால், தன்னை தானே விவசாயி என சொல்லி கொள்ளும் முதல்வர் இது குறித்து எதுவுமே கருத்து தெரிவிக்கவில்லை" என்று டெல்லி போராட்டம் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.

சென்னை கொத்தவால்சாவடியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணத்தின்போது, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாமகவினர் நேற்று நடத்திய போராட்டம், டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

MP Thamizhachi Thangapandian says about PMKs Protest

அதற்கு அவர் பதிலளிக்கும்போது, "பாமக போரட்டம் என்பது தமிழக அரசும் பாமகவும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம்.. அதேபோல, சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னர் எல்லா தரப்பு மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும்.

விவசாயிகளின் போராட்டத்தால் தலைநகரமே ஸ்தம்பித்துபோய் உள்ளது... கனடா பிரதமர் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தந்துவிட்டஆனால், தன்னை தானே விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் திமுக, இந்த புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறது .

புரேவி புயலின் வேகம் குறைவு.. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்வு.. இரவு இலங்கையை கடக்கும்!புரேவி புயலின் வேகம் குறைவு.. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்வு.. இரவு இலங்கையை கடக்கும்!

நடந்து வரும் "விடியலை நோக்கி" ஸ்டாலின் குரல் பிரச்சார பயணத்திற்கு மக்கள் தரும் ஆதரவு வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது" என்றார்.

English summary
MP Thamizhachi Thangapandian says about PMKs Protest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X