சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொக்கிஷம்! பேனா விலை என்னவோ ஒன்றரை லட்சம்தான்.. ஆனால் அது அப்பாவுடையதாச்சே.. விஜய் வசந்த் உருக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: பேனாவின் விலை என்னமோ ஒன்றரை லட்சம்தான். ஆனால் இந்த பேனாவை அப்பாவின் நியாபகமாக பயன்படுத்தி வந்தேன் என கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

கன்னியாகுமரியின் எம்பியாக இருந்தவர் எச் வசந்தகுமார். இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கொரோனா காலத்தில் தனது தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மறைந்தார்.

பேனா தொலைஞ்சு போச்சு! போலீஸில் புகாரளித்த விஜய் வசந்த் எம்பி! ஆமா அந்த பேனா விலை எம்புட்டு தெரியுமா? பேனா தொலைஞ்சு போச்சு! போலீஸில் புகாரளித்த விஜய் வசந்த் எம்பி! ஆமா அந்த பேனா விலை எம்புட்டு தெரியுமா?

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி எம்பி தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஏற்கெனவே 2014 ஆம் தேதி எம்பியாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து எச் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு வென்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல்


இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதில் எம்பி விஜய் வசந்தும் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார்.

விஜய் வசந்த்

விஜய் வசந்த்

அப்போது விஜய் வசந்த் தனது சட்டைப் பையில் வைத்திருந்த பேனா காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது காரில் தேடி பார்த்தார். அங்கும் கிடைக்கவில்லை. நட்சத்திர ஹோட்டலில் விட்டுவிட்டோமோ என நினைத்து அங்கு வந்து பார்த்தார். அங்கும் இல்லை.

 வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இதையடுத்துதான் அங்கிருந்த மேலாளர்களிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து கிண்டி போலீஸாரிடம் விஜய் வசந்த் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது. என்ன ஒரு பேனா திருட்டுக்கு போலீஸில் கம்ப்ளைண்டா, சின்னப்புள்ளத்தனமாக இருக்கே என நீங்கள் நினைத்தால் அது தவறு.

ரூ 1.50 லட்சம்

ரூ 1.50 லட்சம்

அந்த பேனாவின் மதிப்பு ரூ1.50 லட்சமாகும். அந்த பேனாவின் பெயர் மான்ட் பிளாங்க் என்பதாகும். இந்த நிறுவனம் சார்பில் வாட்ச்கள், வாசனை திரவியங்கள், வாலட்டுகள் உள்ளிட்ட தயாரிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் பேனாக்கள் பவுண்டைன் பேனாவாகும். இதன் மதிப்பு ஆயிரக்கணக்கில் ஆரம்பித்து பல லட்சம் வரை நீண்டுக் கொண்டே போகிறது.

 என்ன சிறப்பு

என்ன சிறப்பு


ஆனால் விஜய் வசந்தின் பேனாவின் மதிப்பு ரூ 1.50 லட்சம் ஆகும். இதன் நிப் அதாவது பேனாவின் முனை கோல்ட் ரிப்பனால் செய்யப்பட்டது. சாப்ட்டாக எழுத வேண்டும் என்பதற்காக கைகளாலேயே நிப்கள் பாலிஷ் செய்யப்பட்டன. இந்த பேனாவின் விலை 1.50 லட்சம்தான் என்றாலும் அது வசந்தகுமார் பயன்படுத்தியது.

Recommended Video

    குறிப்பிட்ட கட்சிகள் மட்டும் தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்க சொல்வதற்கு என்ன காரணம்? *Politics
    அப்பாவின் நினைவாக

    அப்பாவின் நினைவாக

    தனது தந்தை இறப்புக்கு பிறகு அவரது நினைவாக அவர் பயன்படுத்திய மான்ட் பிளாங்க் பேனாவை விஜய் வசந்த் பயன்படுத்தி வந்தார். இதுகுறித்து விஜய் வசந்த் கூறுகையில் ரூ 1.50 லட்சம் கொடுத்து புதிய பேனாவை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அது அப்பா பயன்படுத்தியது என்பதால் அதன் விலை மிகவும் உயர்ந்ததாகும். இந்த பேனா காணாமல் போனது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

    English summary
    Kanyakumari MP Vijay Vasanth says that missed pen was used by his father H Vasanthakumar. On his memory he also used that pen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X