சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் உள்ள திமுக- காங்கிரஸ் எம்பிக்கள் காதறுந்த ஊசிகள்.. வெளிநடப்புதான் செய்யலாம்.. தமிழிசை!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக மக்களை மிரட்டும் விதத்தில் பேசும் பாஜக கூட்டணி தலைவர்கள்

    சென்னை: தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள எம்பிக்கள் காதறுந்த ஊசிகள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.

    ஆனால் தென்னிந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு பாஜகவுக்கு இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் பாஜக படுதோல்வியடைந்தது.

    இருக்கிற ஒரு சீட் யாருக்குதான் போக போகுது?.. திரும்பவும் எடப்பாடிக்கு சிக்கல்! இருக்கிற ஒரு சீட் யாருக்குதான் போக போகுது?.. திரும்பவும் எடப்பாடிக்கு சிக்கல்!

    மோசமான தோல்வி

    மோசமான தோல்வி

    பாஜக வேட்பாளர்கள் தங்களை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் கொஞ்சம் கூட போட்டி கொடுக்காமல் மிக எளிதாக லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தனர்.

    அதிமுக எம்பி

    அதிமுக எம்பி

    பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் ஒரே ஒரு இடம் தான் கிடைத்தது. அதுவும் ஆளும் அதிமுகவுக்கு தான். தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ஓபி ரவீந்திரநாத்தான் அந்த எம்பி.

    அமைச்சரவையில் வாய்ப்பு

    அமைச்சரவையில் வாய்ப்பு

    இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்கப்படும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ராஜ்ய சபா எம்பி வைத்தியலிங்கம் மற்றும் லோக்சபா எம்பி ரவீந்திரநாத் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால் இருவருக்குமே இடமளிக்கப்படவில்லை.

    பத்திரிக்கை செய்தி

    பத்திரிக்கை செய்தி

    அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இடம் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெற்றிபெற்ற எம்பிக்கள் குறித்து நாளிதழ் ஒன்றில் பவர்ஃபுல் பார்லிமென்டேரியன்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

    காதறுந்த ஊசிகள்

    காதறுந்த ஊசிகள்

    இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் காதறுந்த ஊசிகள் தைக்கப்பயன்படுமா? வேண்டுமானால் குத்திப்பார்க்கலாம். இதுதான் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களின் நிலைமை.

    வெளிநடப்பு செய்யலாம்

    குரல் கொடுக்கலாம், வெளிநடப்பு செய்யலாம், கோரிக்கை மனு கொடுத்து படம் காட்டலாம். அவ்வளவுதான் செய்யமுடியும். ஆனால் ஆணையிடும் அதிகாரம் யாரிடம் உள்ளது? இருந்தாலும் தமிழகத்தின் தேவைகளை பாஜக நிறைவேற்றும். இவ்வாறு தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu BJP leader Tamilisai has twitted that MPs who won in Tamil nadu are useless.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X