சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரிசி, கோதுமை தவிர மற்ற பயிர்களுக்கும் குறைந்தபட்ச விலை...பாஜக கொடுக்கிறது... நிர்மலா சீதாராமன்!!

Google Oneindia Tamil News

சென்னை: அரிசி, கோதுமை தவிர மற்ற தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்காதவர்கள்தான் இன்று தேவையில்லாத அச்சத்தை உருவாக்கி வருகின்றனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், ''புதிய விவசாய சட்டங்கள் மத்திய அரசின் கீழ் வருகிறது. மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் ஏற்படுவதற்கு இந்த சட்டம் உதவுகிறது. இதன் மூலம் விவசாயத்தில் சீர்த்திருத்தம் ஏற்படும். விளைபொருள்களின் விலையை இனி விவசாயிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லலாம். யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.

MSP: now raising unreasonable apprehensions Says Nirmala Sitharaman

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து தேவையில்லாத யூகங்கள் வேண்டாம். இது முற்றிலும் விவசாயிகளின் நலனுக்கானது. சில அரசுகள் அரிசி மற்றும் கோதுமைக்கு மட்டும் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கின்றன. மற்ற பயிர்களுக்கு நிர்ணயிப்பது இல்லை. கவலைப்படுவதும் இல்லை.

நாங்கள் 20 முதல் 23 உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து இருக்கிறோம். ஆனால், யாரெல்லாம் அரிசி, கோதுமைக்கு மட்டும் கொடுத்தார்களோ இன்று அவர்கள் தவறான அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

MSP: now raising unreasonable apprehensions Says Nirmala Sitharaman

பாஜக 2014ல் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் மற்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமக்கு 23-24 லட்சம் டன் பருப்பு தேவைப்படுகிறது. ஆனால், நாட்டில் 16 லட்சம் டன் மட்டுதான் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்...வதந்தியை நம்ப வேண்டாம்...தேமுதிக தகவல்!! விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்...வதந்தியை நம்ப வேண்டாம்...தேமுதிக தகவல்!!

மண்டிகளில் 8 முதல் 8.5 சதவிகிதம் வரை விவசாயிகள் கட்டணமாகவும் இடைத்தரகர்களுக்கு வரியாகவும் செலுத்தி வந்தனர். இனி அந்த வரியைக் கட்ட வேண்டியது இல்லை. வெளியே விற்பனை செய்தால், விவசாயிகள் வரி செலுத்த வேண்டியது இல்லை. விளைபொருள்களை பெற்றவுடன் ரசீது கொடுக்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்" என்றார்.

English summary
MSP: now raising unreasonable apprehensions Says Nirmala Sitharaman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X