சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முகேஷின் நெற்றியில் சுட்டு கொன்ற விஜய்.. தப்பி ஓடியவர் கோர்ட்டில் சரண்... திடுக்கிடும் தகவல்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவர் மீது துப்பாக்கிச் சூடு... நெற்றியில் குண்டு பாய்ந்து பலி

    சென்னை: முகேஷின் நெற்றியில் குறி பார்த்து சுட்டு கொன்றுவிட்டு, தப்பித்து ஓடிய விஜய் என்ற இளைஞர் கோர்ட்டில் இன்று சரணடைந்துள்ளார். இதனால் தமிழகத்தை உலுக்கிய முகேஷின் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    உதயா, விஜய் ஆகியோர் முகேஷின் நெருங்கிய நண்பர்கள்! நேற்று காலை விஜய்யின் வீட்டுக்கு உதயா சென்றுள்ளார். அங்கு விஜய்யுடன் முகேஷ் ஒரு ரூமில் பேசி கொண்டு இருந்திருக்கிறார்.

    அப்போது, ஹாலில் விஜய்யின் அண்ணன் உதயாவும், இன்னொருரூமில் விஜய்யின் மற்றொரு சகோதரர் அஜித், அவர் மனைவி இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.

    பள பளக்கும் தங்கம்.. ஆனால் பள பளக்கும் தங்கம்.. ஆனால் "அந்த" இடத்தில் போய் வச்சு கடத்திருக்கீங்களே.. குருவிகளா!

    துப்பாக்கி சத்தம்

    துப்பாக்கி சத்தம்

    இதனால் வீட்டில் இருந்தவர்கள் பதறிப்போய் ரூமுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, சரியாக நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய, முகேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை கண்டு அலறினார்கள். பக்கத்தில் விஜய் துப்பாக்கியுடன் எந்தவித சலனமும் இல்லாமல் நின்று கொண்டு இருந்திருக்கிறார். உயிருக்கு போராடிய முகேஷை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அனுமதித்தும், பலனின்றி உயிரிழந்தார்.

    நண்பர்கள்

    நண்பர்கள்

    இந்த சம்பவம் தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாழம்பூர் போலீசார் துரிதமாக இந்த வழக்கு விசாரணையில் இறங்கினார்கள். விஜய்யின் அண்ணன்கள் உதயா, மற்றும் அஜீத்தை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முகேஷ்-விஜய் இருவருமே ரொம்ப வருட நண்பர்களாம்.

    வீடியோ கேம்

    வீடியோ கேம்

    இவர்களுக்கு பப்ஜி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. வீட்டில் இருவருமே வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மோதல் காரணமாகவே முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கக்கூடும் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவித்தன.

    நாட்டுத் துப்பாக்கி

    நாட்டுத் துப்பாக்கி

    தொடர்ந்து, முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்ட வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.அத்துடன் தலைமறைவான விஜயையும் தேடி வந்தனர். விஜய் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் வேலை பார்த்து வருபவராம். இவருக்கு எப்படி இந்த துப்பாக்கி கிடைத்தது என்பதுதான் இந்த சம்பவத்தில் பெரும் வியப்பாகவே உள்ளது. இது ஒரு நாட்டு துப்பாக்கி என்கிறார்கள்.

    கோர்ட்டில் சரண்

    கோர்ட்டில் சரண்

    அதனால் விஜய்யை பிடித்து விசாரித்தால்தான் எல்லா விவரமும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று காலை விஜய் சரணடைந்தார். அநேகமாக அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவரிடம் நடைபெறும் விசாரணையை அடுத்துதான், எதற்காக முகேஷை கொன்றார், என்ன தகராறு நடந்தது, இந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது, வேறு யாருடன் தொடர்பு என்ற கேள்விகளுக்கு விடைகள் தெரியவரும்.

    English summary
    youth vijay surrendered before the chengalpet judicial magistrate over student mukesh murder case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X