சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் தொடர்ச்சியே - சீமான் கொதிப்பு

யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: இரவோடு இரவாக இடிக்கப்பட்ட.. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண்.. பொங்கி எழுந்த சீமான்..!

    இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் போர் நிகழ்ந்த போது கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்ந்த இனப்படுகொலையின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைப்பகுதியில் நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

    Mullivaikkal memorial destroy in Jaffna University Seeman condemns

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட பேரழிப்பிற்கு நீண்டகாலமாய் நீதிகேட்டு உலகத்தமிழர்கள் உள்ளம் குமுறிக்கொண்டிருக்கையில், வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல சிங்களப் பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இக்கோரச்சம்பவம் ஏற்றுக்கொள்ளவே முடியாத வன்மையான கண்டனத்திற்குரியது என்று பதிவிட்டுள்ளார்.

    இது தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் தொடர்ச்சியே. ஒற்றை இலங்கைக்குள் சிங்களர்களோடு இணைந்து தமிழர்கள் வாழ்கிறவரை, சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கீழ் இருக்கிற வரை எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அடக்கி ஒடுக்க முற்படுகிறபோதெல்லாம் சினம்கொண்டு திமிறி எழும் பேருணர்ச்சியைக் கொண்டு தமிழ்த்தேசிய இன மக்கள் நாங்கள் மீண்டெழுவோம். இந்திய வல்லாதிக்கமும், பன்னாட்டுச்சமூகமும் எங்களை வஞ்சிக்கலாம். துரோகம் விளைவிக்கலாம். ஒருநாள் இந்நிலை மாறும். களமும், காலமும் எங்கள் கைகள் வரப்பெறும்.

    முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகாலமாக எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருந்த நிலையில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Seeman, the leader of the Naam Tamil Party, has said that the demolition of the Mullivaikkal memorial at the University of Jaffna overnight is shocking to the Tamils who are facing the Eelam disaster.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X