சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்லூரி படிப்புகளில் மாற்றம்.. இனி ஓரிரு வருடம் "பிரேக்"எடுத்துவிட்டு மீண்டும் படிக்கலாம்.. பின்னணி!

நாடு முழுக்க புதிய கல்விக்கொள்கையின் படி, உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுக்க புதிய கல்விக்கொள்கையின் படி, உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அங்கன்காடி பாடத்திட்டம் தொடங்கி கல்லூரி பாடம் வரை அனைத்திலும் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முக்கியமாக உயர் கல்விகள் எம்பில் பாடம் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா முழுக்க மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று புதிய கல்விக்கொள்கை அறிவித்துள்ளது.

இனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!இனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!

முக்கிய திருத்தம்

முக்கிய திருத்தம்

இந்த நிலையில் கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரும் வகையில் முக்கியமான திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதன்படி "multiple exit option" என்ற புதிய திட்டத்தை உயர்கல்வி படிப்புகளில் அமல்படுத்தி உள்ளனர். அதாவது உயர்கல்வி படிக்கும் மாணவர் அதில் இருந்து எப்போது வேண்டுமானாலும் உரிய சர்டிபிகேட் உடன் வெளியேற முடியும்.

உரிய சர்டிபிகேட் தரப்படும்

உரிய சர்டிபிகேட் தரப்படும்

கல்லூரி இடை நிற்றல் என்று இல்லாமல், இப்படி பாதியில் வெளியேறும் மாணவர்களுக்கு உரிய சர்டிபிகேட் கொடுக்கப்படும். இதுதான் "multiple exit option". அதாவது நாடு முழுக்க புதிய கல்விக்கொள்கையின் படி, உயர்படிப்புகளில் மாணவர்கள் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

உதாரணமாக முதல் வருடத்தில் கல்லூரியில் இருந்து வெளியேறினால் அதற்கு என்று ஒரு சர்டிபிகேட் கொடுக்கப்படும். பின் 2ம் வருடம் வெளியேறினால் டிப்ளமோ சர்டிபிகேட் தரப்படும். 3ம் வருடம் வெளியேறினால் கலை படிப்பிற்கு டிகிரி சர்டிபிகேட்டும், எஞ்சினியரிங் படிப்பிற்கு பிஜி டிப்ளமோ சர்டிபிகேட்டும் வழங்கப்படும். இவர்கள் எப்போது நினைத்தாலும் மீண்டும் எங்கு வேண்டுமானாலும் படிப்பை தொடரலாம்.

ஏன் வித்தியாசம்

ஏன் வித்தியாசம்

முன்பு முதல் வருடம் ஒருவர் படிப்பை விட்டு நீங்கினால் அவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் மீண்டும் கவுன்சிலிங் செல்ல வேண்டும். 12ம் வகுப்பு மார்க் அடிப்படையில் மீண்டும் சேர வேண்டும். ஆனால் இனி மாணவர்கள் விட்ட இடத்தில இருந்தே படிக்கலாம். மீண்டும் படிக்க விருப்பம் இல்லை என்றால், அதற்கு உரிய சர்டிபிகேட் வைத்தே பணிகளை செய்யலாம்.

வருகிறது திட்டம்

வருகிறது திட்டம்

இதற்காக " Academic Bank of Credit" என்ற திட்டம் கொண்டு வரப்படும். இந்த சர்டிபிகேட்களை வைத்துக்கொண்டு Academic Bank of Credit திட்டம் மூலம் எந்த கல்லூரியில் வேண்டுமானாலும் படிப்பை தொடரலாம். பொருளாதார காரணத்தால் படிப்பை விடும் உயர்கல்வி மாணவர்கள் வேலை பெறவும், மீண்டும் படிக்கவும் இது வகை செய்யும் என்று கூறுகிறார்கள். இந்த புதிய கல்விமுறை குறித்து விரிவாக விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

English summary
Multiple exit option introduced in higher educations says New Educational Policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X