சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. ஈஸியாக பஸ்ஸை பிடிக்க சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. ஈஸியாக பஸ்ஸை பிடிக்க சூப்பர் அறிவிப்பு

    சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நாளை முதல் அக்டோபர் 26 வரை, 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் வழக்கமான பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இதன்படி 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படும் தலா 2,225 அரசு பேருந்துகளுடன் கூடுதலாக 3 நாட்களும் 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன்படிததான் 10,940 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு குறிப்பிட்டு இருந்தது.

    அரபி கடலில் புயல் சின்னம்.. 45 முதல் 55 கிமீ வேகத்துக்கு சூறாவளி.. குமரி கடலோரத்துக்கு எச்சரிக்கை!அரபி கடலில் புயல் சின்னம்.. 45 முதல் 55 கிமீ வேகத்துக்கு சூறாவளி.. குமரி கடலோரத்துக்கு எச்சரிக்கை!

    இணைப்பு பேருந்துகள்

    இணைப்பு பேருந்துகள்

    கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே கே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்ல ஏதுவாக வரும் 24ம் தேதி (நாளை) முதல் 26ம் தேதி வரை 310 இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த தகவலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    கோயம்பேட்டில் புறப்படும்

    கோயம்பேட்டில் புறப்படும்

    நாளை முதல் 26ம் தேதி வரை மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.

    தாம்பரம் சானிட்டோரியம்

    தாம்பரம் சானிட்டோரியம்

    விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.

    வேலூர் மார்க்கம்

    வேலூர் மார்க்கம்

    கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    English summary
    Municipal special bus service 24 hours on chennai before Diwali ( 24th, 25th, 26th)
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X