சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு - தமிழக முதல்வர்

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எ

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டிமுடி குடியிருப்பு பகுதியில் கடந்த 7 ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் மண்ணில் சிக்கினர். 13 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 61 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மாயமானவர்களின் உடல்களை தேடும் பணி நீடிக்கிறது. மாயமானவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Munnar landslide : TN CM announce relief fund of Rs 3 lakh each to the families of the victims of andslides

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கேரள காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் என பல்வேறு தரப்பினரும் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே தேயிலை தோட்டங்களில் குடியேறி வேலை செய்து வருகின்றனர். கயத்தாறு பகுதியில் உள்ள உறவினர்கள் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று உறவினர்களை தேடி வருகின்றனர்.

"நம்ம அமைச்சரா இது? " ஒத்த போட்டோவை வெளியிட்டு மொத்த பேரையும் தெறிக்க விட்ட ஜெயக்குமார்.. செம.. செம!

இந்த நிலையில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy has announced that relief assistance of Rs. 3 lakhs each will be provided to the families of the victims of the three landslides in Idukki district in Kerala. The Chief Minister of Tamil Nadu has announced that 1 lakh rupees will be given to those who are seriously injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X