சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN BJP leader seems to be lingering

    சென்னை: தேசிய தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழக பாஜக தலைவர் மிக விரைவில் தேர்வு செய்யப்படுவார் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

    தமிழக பாஜக தலைவராக கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

    Muralidhara Rao says that TN State BJP President will be selected soon

    இதையடுத்து அவரே இத்தனை ஆண்டுகளாக அப்பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை தோல்வியை சந்தித்தார்.

    இதையடுத்து கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்த அவர் இதுவரை 43 லட்சம் உறுப்பினர்களை பாஜகவில் இணைத்தார். இதையடுத்து தமிழிசை , தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து தமிழக பாஜக தலைவராக அவரது பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடையவுள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத் தொடர்ந்து அடுத்த பாஜக தலைவர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பதவிக்கான ரேஸில் நிறைய பேர் உள்ளனர். இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் கூறுகையில் தேசிய தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து தமிழக பாஜக தலைவர் மிக விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்றார்.

    English summary
    Muralidhara Rao says that we will discuss with National leaders and then select TN BJP President soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X