சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக கொடியில் இருப்பது அமித்ஷா தாத்தா என்றுகூட சொல்வார்கள்.. முரசொலி தடாலடி!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கொடியில் இருப்பது அமித்ஷாவின் தாத்தா என்றுகூட சொல்வார்கள் என திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கூறியுள்ளது.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அதிமுக அரசை சாடி முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. இதுதொடர்பாக முரசொலி எழுதியுள்ள தலையங்கம்:

தமிழ் - உயிரனைய அன்னைத் தமிழ்மொழி.
ஆங்கிலம் - உலகத் தொடர்பு மொழி.

Murasoli blasts AIADMK for its stand on new education policy

இரண்டும் போதும் என்பதே இருமொழிக் கொள்கை. இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆண்ட பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்து விட்டுப்போன மொழிக் கொள்கை இது. இருமொழிக் கொள்கையே ஒருவனை உயர்த்தும். மும்மொழிக் கொள்கை முடக்கும். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், 'இருமொழிக் கொள்கைக்கு எதிரான எதனையும் இறுதிவரை எதிர்ப்போம்' என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அண்ணா வழியில் நடக்கும் கழகம், இப்படித்தான் முடிவெடுக்க முடியும்.

தர்மம் - அதர்மம் என்ற பொருள் கொண்ட தி.மு.க.வுக்கு எதிர் இயக்கமாம் அ.தி.மு.க.வின் தலைமை நாற்காலியை அபகரித்து வைத்திருக்கும் சேலத்துச் சேக்கிழார், ஏதோ தமிழுக்காக தீக்குளிக்கத் தயாராக இருப்பதுபோல காட்டிக் கொள்ள நினைத்து, 'இந்தியா முழுமைக்கும் மூன்றாவது மொழியாக தமிழை கற்பிக்க வேண்டும்' என்று முழங்கி' இருந்தார். 'எனக்கே கோரிக்கை வைக்கிறாயா?' என்று மோடி மிரட்டினாரோ என்னவோ சில மணி நேரங்களில் அந்த முழக்கத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

'ஆபரேஷன் ப்ளூஸ்டார்' சோவியத் யூனியனின் சதி... பிந்தரன்வாலே 'துறவி'.. சு.சுவாமி பகீர்!'ஆபரேஷன் ப்ளூஸ்டார்' சோவியத் யூனியனின் சதி... பிந்தரன்வாலே 'துறவி'.. சு.சுவாமி பகீர்!

தமிழை மூன்றாவது மொழியாக இந்தியா முழுமைக்கும் கற்றுத் தாருங்கள் என்றால், மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறாரா? மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பது என்பதே இந்தியை ஆதரிப்பதுதான். இந்தியை படிக்க வைப்பதற்காகவே, மும்மொழித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஒருவர் முப்பது மொழி கூட படிக்கலாம். அது அவர் விருப்பம் சார்ந்தது. ஆனால் கட்டாயத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியைக் கூட திணிக்கக் கூடாது. இது தாய்மொழி வெறுப்பு அரசியல். அந்நிய மொழி திணிப்பு அரசியல். இந்தி மேலாதிக்க மேட்புமை அரசியல்.

ஆங்கிலம் கூடத் தேவையில்லை ; தமிழ் மட்டுமே போதுமானது என்று சொல்லப்பட்டபோது, 'பச்சைத் தமிழர்' காமராசர்தான் சொன்னார் : "ஆங்கிலத்தை எதிர்த்தீங்கண்ணா , அந்த இடத்துல இந்தி வந்து குந்திக்கும்னேன்" என்றார். எனவே இருமொழிக் கொள்கை என்பதும் தமிழும் - ஆங்கிலமும் என்பதுதான். மற்ற மொழியினருக்கு அவரவர் தாய்மொழியும், ஆங்கிலமும் என்பதுதான். தமிழும், இந்தியும் என்பது இருமொழிக் கொள்கை ஆகாது. அப்படிச் சொன்னால் அது இந்தி மொழிக் கொள்கையே தவிர, இருமொழிக் கொள்கை ஆகாது.

'இந்தியை எதிர்த்தால், நமக்குத் தொடர்பு மொழி என்ன? நாம் தனிமைப்பட்டு விடுவோம்' என்று இன்று நய வஞ்சகமாகக் கேள்வியை நல்ல பிள்ளை போல் கேட்பவர்கள் அண்ணா காலத்திலும் இருந்தார்கள். 'உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலம் இருக்கும்போது, இந்தியத் தொடர்பு மொழியான இந்தி எதற்கு?' என்று கேட்ட அண்ணா அவர்கள், அந்த அதிபுத்திசாலிகளுக்கு புரியும் வண்ணம் பூனை உதாரணம் ஒன்றைச் சொன்னார்.

"தாய் பூனை செல்வதற்கு ஒரு துவாரம் போட்டால், குட்டி பூனை செல்வதற்கு தனி துவாரம் தேவையில்லை. அதிலேயே இதுவும் சென்றுவிடும்" என்றார் அண்ணா . அது இன்றைய சேக்கிழாருக்கு புரியுமா எனத் தெரியவில்லை .

இந்திப் பிரச்சினை ஒரு வாரகாலமாக தீப்பற்றி எரிகிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பின் வெப்பம் டெல்லியைச் சுட்டது. புதுப்புது மத்திய அமைச்சர்கள், புதுப்புது விளக்கங்களைக் கொடுத்தார்கள். ஆனாலும் தமிழக எதிர்ப்பைத் தணிக்க முடியவில்லை. இறுதியாக அந்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையிலேயே திருத்தம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இது கஸ்தூரிரங்கன் ஒப்புதலோடு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. மத்திய அரசாங்கம் நினைத்தவுடன் அதில் திருத்தம் செய்கிறது என்றால் அது கஸ்தூரிரங்கன் அறிக்கையா? பா.ஜ.க.வின் அறிக்கையா?

'இது வரைவுத் திட்டம்தான், எங்களது அரசு முடிவு அல்ல' என்றது பொய்யா? வரைவுத் திட்டத்துக்கு பொதுமக்கள் கருத்துச் சொல்ல ஜூன் 30 வரை கால அவகாசம் இருக்கும்போது அவசர அவசரமாக திருத்தம் போட வேண்டிய அவசியம் என்ன? - இவ்வளவு விவாதங்கள் பொது வெளியில் நடந்து கொண்டிருந்தபோதெல்லாம், கருத்தே சொல்லாமல் 'மிக்சர்' சாப்பிட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஞானோதயம் வந்தவராக கிளர்ந்து எழுந்து, 'இந்தியா முழுக்க தமிழைக் கற்றுக் கொடுங்கள்' என்று கிளம்பினார்.

பா.ஜ.க.வின் அடிமை அணியாக, துணை அமைப்பாக அ.தி.மு.க.வை ஆக்கிவிட்ட இந்தக் கூட்டத்துக்கு இருமொழிக் கொள்கையும் தெரியவில்லை. மும்மொழிக் கொள்கையும் தெரியவில்லை. அண்ணாவையும் தெரியவில்லை. இவருக்குத் தெரிந்ததெல்லாம், 'டிபன் சாப்பிட்டீங்களாண்ணா ?', 'காபி சாப்பிட்டீங்களாண்ணா ?' தான்.

அ.தி.மு.க. கொடியில் இருப்பது அண்ணா அல்ல, அமித்ஷாவின் தாத்தா என்று கூட விளக்கம் சொல்வார்கள், ஜெயலலிதாவையே மறந்து விட்ட இந்த ஜென்மங்கள்! என்று சாடியுள்ளது முரசொலி தலையங்கம்.

English summary
Murasoli editorial has blasted AIADMK for its stand on new education policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X