சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாணலாய் வளைகிறீர்களா இல்லை நாணயத்துக்கு வளைகிறீர்களா.. பாமகவை விமர்சித்த முரசொலி!

Google Oneindia Tamil News

சென்னை: நாணலாய் வளைகிறீர்களா இல்லை நாணயத்துக்கு வளைகிறீர்களா என முரசொலி நாளிதழில் பாமகவை விமர்சித்து தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இந்த நிலையில் முரசொலி நாளிதழில் நாணலாய் வளைகிறீர்களா! நாணயத்துக்கு வளைகிறீர்களா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

அதில் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்றால் மோடிக்கு மசாஜ் செய்வது போல என்று ஒரு கார்டூன் வந்தது.

விரட்டுதல்

விரட்டுதல்

இதுதான் அவர் கொடுக்கும் அழுத்தம். மோடிகிட்ட போய் அன்புமணி எப்படி பேசுவார்? எடப்பாடி பழனிசாமியைப் போல வாயைப் பொத்திக் கொண்டு, ‘ஐயா, பாத்துப் பண்ணுங்கய்யா... எனக் கேட்பார்' மோடி இவரைப் பார்த்து போ.. போ... என விரட்டுவார்! இதுதான் நடக்கப் போகிறது.

 பாட்டாளி சொந்தங்கள்

பாட்டாளி சொந்தங்கள்

சின்ன அய்யாவே, இப்படி நடித்துக் காட்டிய பேச்சு நீங்கள் பார்த்ததாகக் கூறிய வாட்ஸ் ஆப்பில் இன்று ஓடுகிறதே. அந்த வாட்ஸ் ஆப் காட்சிகளில் நீங்கள் பேசியது மட்டுமின்றி அந்தக் கேலி பேச்சை ரசித்து மகிழ்ந்து நாங்கள் கை தட்டியதும் வருகிறதே! அதனை எங்களிடம் காட்டி நேற்று இப்படி எல்லாம் பேசிய உங்க சின்ன அய்யா, மோடி, மற்றும் எடப்பாடி பழனிசாமி இரண்டு பேருக்கும் மசாஜ் செய்ய உங்கள் சின்ன அய்யா புறப்பட்டுவிட்டாரே, உங்களுக்கு வெட்கமில்லையா? என்ற கேள்விக்கு பாட்டாளி சொந்தங்கள் பதில் சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள்.

 விரட்டி அடிக்க போறாங்க

விரட்டி அடிக்க போறாங்க

"மானங்கெட்டவனுங்க.. இவனுகளெல்லாம் நெடுஞ்சாலை என்றால் வளர்ச்சிதான். ஆனால, இந்த நெடுஞ்சாலை வளர்ச்சி கிடையாது! இது எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும்தான் வளர்ச்சியே தவிர மக்களுக்கு இதுல வளர்ச்சி கிடையாது. மானங்கெட்ட அரசாங்கம் இதெல்லாம்! இங்க உள்ள மருத்துவமனைக்கு போய் கேட்டா காரி உமிழுறாங்க மக்களெல்லாம். இதுக்கெல்லாம் இருக்குது எலக்ஷன் நேரத்துல பாருங்க. மக்கள் இவங்களை எல்லாம் விரட்டி அடிக்கப் போறாங்க. இவன் ஒருத்துனுக்கும் டெபாசிட் கிடைக்காது."

மறுக்க வார்த்தை

மறுக்க வார்த்தை

இப்படியெல்லாம் எள்ளும், கொள்ளும் வெடிக்கப் பேசிய அன்புமணி இப்போது ஏன் அவர்கள் காலில் விழுந்து கிடக்கிறார். எலெக்ஷன் நேரத்துல பாருங்க.. மக்கள் இவனுகளை ஓட ஓட விரட்டப போறானுங்க.. என்று கூறினாரே. இப்போது அவரது கருத்தை மாற்றிக் கொள்ள காரணம் கலெக்ஷனா என்று கேட்கிறார்களே. மறுக்க வார்த்தை இல்லாது மவுனியாகக் கிடக்கும் பாட்டாளி சொந்தங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Murasoli criticises PMK's Ramadoss and Anbumani Ramadoss in its mouthpiece.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X