சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி

Google Oneindia Tamil News

சென்னை: நல்ல மனதை புண்படுத்தும் செய்திகள் இனி வெளியிடப்படாது என முரசொலி நிர்வாகம் கூறியுள்ளது.

ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தில் ஒரு சிலருக்கு பதவி பறிக்கப்படுவதும் புதியவர்களுக்கு அது மாற்றி வழங்கப்படுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் குறிப்பிட்ட அந்த நிர்வாகிகள் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததே காரணமாக சொல்லப்படுகிறது.

 Murasoli instructed on controversial articles which hurt Rajini

மேலும் தாங்கள் 30 முதல் 40 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்து வருகிறோம். எங்களை நீக்குவதாக என நீக்கப்பட்ட நிர்வாகிகள் கேட்டது ரஜினிகாந்தை எட்டியது. இதையடுத்து அவர் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டார்.

அதில் அவர் கூறுகையில் 30- 40 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்தது
மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ இல்லை அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகி விடாது. தன் குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்ற பணிகளுக்கு வர வேண்டாம்.

யாரும் மன்றத்துக்காக தங்கள் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை கிண்டல் செய்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை வெளியானது.

இது ரஜினி தரப்பையும் ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து முரசொலி ஆசிரியர் குழுவை கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

முரசொலி ஆசிரியர் வெளியிட்ட செய்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளி வந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Murasoli administration instructed their editorial to take utmost carewhile doing articles related to Rajinikanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X