சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள்.. ரஜினிக்கு தலையங்கத்தில் பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Murasoli gives befitting reply to Rajinikanth

    சென்னை: முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினிக்கு முரசொலி நாளிதழில் தலையங்கம் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    அந்த தலையங்கத்தில், முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள். அதுவும் திராவிட இயக்கத் தமிழன் என்று பொருள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள்.

    எல்லோர்க்கும் எல்லாம் என்ற சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடியின் இன்றைய குடிமக்கள் என்று பொருள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பவன் என்று பொருள்.

    ஒடுக்கப்பட்ட சமூகத்தவன்

    ஒடுக்கப்பட்ட சமூகத்தவன்

    முரசொலி வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கிவிட்டவன் என்று பொருள். இனியும் ஒடுங்க மறுப்பவன் என்று பொருள். ஒடுக்கியவர் திமிர் ஒடுங்க ஒன்று சேர்ப்பவன் என்று பொருள்.

    அடிமையில்லை

    அடிமையில்லை

    எத்தனை மிக மிக என்றும் போட்டுக் கொள்ளுங்கள் என்று பொருள். மிக மிக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவன் என்று பொருள். தான் யாருக்கும் அடிமையில்லை. தனக்கும் யாரும் அடிமையில்லை என்பவன் என்று பொருள்.

    வீழ்வது நாம்

    வீழ்வது நாம்

    முரசொலி வைத்திருந்தால் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பவன் என்று பொருள். பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்குபவன் என பொருள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பவன் என்று பொருள்.

    தேர்வு

    தேர்வு

    முரசொலி வைத்திருந்தால் தமிழ் காப்போன் என பொருள். தமிழர் நலன் காப்போன் என்று பொருள். தமிழ்நாடு காப்போன் என்று பொருள். வாழ்ந்த இனம், வீழ்ந்ததன் வரலாறும் வீழ்ந்த இனம் மீண்டும் வாழச் சரியான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டவன் என்று பொருள்.

    யார் நண்பன்

    யார் நண்பன்

    யார் எதிரி, யார் நண்பன் என்பதை உணர்ந்து விட்டவன் என்று பொருள். எதிரிகளோடு எச்சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாதவன் என பொருள், முரசொலி வைத்திருந்தால் ஆண்டான், அடிமைக்கு எதிரானவன் என்று பொருள்.

    தலையங்கம்

    தலையங்கம்

    சாதிச் சதியை எதிர்ப்பவன், மத மாச்சர்கயங்களை வெறுத்தவன் என்று பொருள். சாதி பேதம், மத பேதம் பார்க்காதவன் என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட உடன்பிறப்பு என பொருள். முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் மனிதன் என்று பொருள் என அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Mouth Piece written in Murasoli which gives suitable reply to Rajinikanth that if anyone read Murasoli then who is he/she?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X