சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நரேந்திரமோடி, அமித்ஷா மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது? முரசொலியில் தலையங்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: நரேந்திரமோடியும் அமித்ஷாவும் மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது என கேட்டு முரசொலியில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து நரேந்திரமோடி, அமித்ஷா மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது? என்ற தலைப்பில் அந்த தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

17ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி நேற்றோடு முடிவடைந்தது. இந்தியா முழுமையும் 7 கட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்து இருக்கின்றன. நாடு முழுவதும் விதவிதமான சர்ச்சைகள், தாக்குதல்கள் என நடைபெற்று முடிந்து இருக்கின்றன.

கருத்து கணிப்பெல்லாம் பொய்.. ஆஸ்திரேலியாவில் நடத்திய கணிப்புகள் என்னவாயிற்று.. சசி தரூர் கருத்து கணிப்பெல்லாம் பொய்.. ஆஸ்திரேலியாவில் நடத்திய கணிப்புகள் என்னவாயிற்று.. சசி தரூர்

பேட்டி

பேட்டி

காங்கிரஸ்- திமுக தலைமையிலான அணியும் பாஜகவின் தலைமையிலான அணியும் மே 23-ஆம் தேதி வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காகப் பேராவலாக எதிர்பார்த்த வண்ணமாகக் காத்திருக்கின்றன. இன்னும் சொல்வதானால் இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய எதிர்பார்ப்பின்போது பேட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.

சோர்ந்த மோடி

சோர்ந்த மோடி

மே 17-ஆம் தேதி மாலை டெல்லியில் உள்ள பாஜகவின் அலுவலகத்தில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கூட்டாக பேட்டி அளித்தனர். மோடி பத்திரிகையாளர்களை தாமாக முன்வந்து சந்தித்தது இல்லை. அவரது சாதனைகளை பத்திரிகையாளர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டதில்லை. அமித்ஷாவும் மோடியும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது மிகவும் வியப்பாக இருந்தது. தொலைக்காட்சிகளில் மோடி முகம் தெளிவாக இல்லை. மிகவும் சோர்ந்து போய் காணப்பட்டார்.

நீண்ட விளக்கம்

நீண்ட விளக்கம்

மோடி- அமித்ஷா பேட்டி படத்தோடு எல்லா ஏடுகளிலும் வெளியாகி இருந்தன. மோடி சுருக்கமாகவே பேசினார். அவர் தொடக்கத்திலேயே பத்திரிகையாளர்களுக்கு பதில் அளிக்க போவதில்லை என்பதைத் தெரிவித்துவிட்டார். அமித்ஷாதான் நீண்ட விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

அமித்ஷா

அவர்கள் ஆட்சியில் சாதனைகள் நிகழ்த்தியதாகச் சொல்லிக் கொண்டார். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வரப் போவதாகவும் கூறிக் கொண்டார்கள். அவர்கள் சாதனைகளை பற்றி அமித்ஷா, பத்திரிகையைாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதை பற்றியெல்லாம் நாம் இங்கே எதுவும் சொல்லவரவில்லை என்று இப்படியாக இந்த தலையங்கம் நீள்கிறது. இதன் தொடர்ச்சியை இங்கே பார்த்துக் கொள்ளுங்கள்:

English summary
Murasoli in its mouth piece says that if Narendra Modi and Amit Shah again come to power then what will happen?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X