சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கீழடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.. தமிழ்நாடு நாளில் முதல்வர் சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

museum in keezhadi : TN CM edappadi palaniswami announced on tamil nadu day

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இதனால் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரியிருந்தனர்.

இந்நிலையில் உலகத்தரத்தில் கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

English summary
TN CM edappadi palaniswami announced wolrld class museum in keezhadi at tamil nadu day function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X