சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரமலான் நோண்பு நாளை தொடக்கம்.. தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் நோண்பு நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இஸ்லாமியர்களின் ரமலான் நோண்பு வரும் 7-ம் தேதி அதாவது நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக விளங்குவது ரமலான் நோண்பு. இதனை ரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட மாலைப்பொழுதின் அதிகாலையில் முதல் நோண்பினை முஸ்லிம்கள் கடைபிடிக்கின்றனர்.

Muslim fasting month of Ramalan to start tomorrow

அதிகாலையில் எழுந்து, "சஹர்" எனப்படும் சூரியன் உதயம் முடிவதற்குள் சாப்பிட்டு முடித்தபின், "மஹ்ரிப்" எனப்படும் மாலை தொழுகை நேரம் வரை கிட்டத்தட்ட 14 மணி நேரம் ஒருதுளி நீரைக்கூட பருகாமல் உடலை வருத்தி, இறைவனை நினைத்து, ஐந்து வேளையும் வணங்கி வரும் 30 நாட்களை கழிப்பதே ரமலான் இந்த நோண்பின் சிறப்பாகும்.

பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டின் ரமலான் நோண்பு வரும் 7-ம் தேதி அதாவது நாளை அதிகாலை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் தலைமை காஜி இதனை அறிவித்துள்ளார்.

English summary
Haji has announced, Muslim fasting month of Ramalan to start from Tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X