சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உவைசி வீட்டில் தாக்குதல்.. கடைந்தெடுத்த கோழைகள் தான் இப்படி செய்வார்கள்.. முஸ்லீம் லீக் கண்டனம்..!

Google Oneindia Tamil News

சென்னை: அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அஸதுத்தீன் உவைஸியின் டெல்லி இல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் தாக்குதல் நடத்துவது கடைந்தெடுத்த கோழைத்தனம் என அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அஸதுத்தீன் உவைசிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

ரொம்ப நாளுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்ட தாடி; விமானத்தில் கூட கையில் ஃபைல்! வைரலான பிரதமர் மோடி படம்ரொம்ப நாளுக்கு பிறகு ட்ரிம் செய்யப்பட்ட தாடி; விமானத்தில் கூட கையில் ஃபைல்! வைரலான பிரதமர் மோடி படம்

இனிய சகோதரர்

இனிய சகோதரர்

இனிய சகோதரர் அஸதுத்தீன் உவைஸி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ், தங்கள் மீதும் நமது அருமை தேசத்தின் மீதும் தனது பேரருளைப் பொழியப் பிரார்த்திக்கின்றேன். தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ள செய்தியால் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்து சேனாவைச் சேர்ந்த திசை மாறிய குண்டர்கள் தங்களின் புதுடெல்லி 24 அசோகா சாலை பங்களாவைத் தாக்கியுள்ளனர்.

கோழைகள்

கோழைகள்

இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும், கொலை வெறியர்கள் தங்களின் இல்லத்தைச் சூறையாடிய நேரத்தில் தாங்கள் அங்கே இல்லாமல் இருந்ததால் பாதுகாக்கப் பெற்றுள்ளீர்கள். டெல்லியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அஸதுத்தீன் உவைஸி இல்லத்தை தாக்கிச் சூறையாடியவர்களைத் தூண்டிவிட்டவர்கள் கடைந்தெதெடுத்தக் கோழைகள்.

கண்டனம்

கண்டனம்

வாதங்களை, தக்க ஆதாரத்துடன் எதிர்த்து வாதிடும் ஆற்றலைத் தெரியாமல் வளர்ந்துள்ளவர்கள் என்பது தெளிவு. இந்திய அரசியல் சாசனத்திலும் இந்திய ஜன நாயக முறையிலும் நம்பிக்கையுள்ள யாரும் இதனைக் கடுமையாகக் கண்டிக்காமல் இருக்கமுடியாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில், இந்தக் கொலை வெறிக் கும்பலின் கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இறைவன் அருள்

இறைவன் அருள்

தங்களுக்குப் பொறுமையையும் , நெஞ்சுறுதியையும், நாட்டில் தலையெடுக்கும் தீய சக்திகளைத் தொடர்ந்து எதிர்த்து போராடக்கூடிய துணிச்சலையும் இறைவன் தங்களுக்கு அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட அஸதுத்தீன் உவைசி அங்கு பிரச்சாரத்தையும் தொடங்க உள்ளார்.

English summary
Muslim League condemns attack on Owaisi home
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X