சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பல்லாயிரம் பேர்.. குடும்பத்தோடு வீதிக்கு வந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்.. சென்னையில் பெரும் பேரணி

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமைத் சட்டத்திருத்தத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் குடும்பத்தோடு, சென்னையில், பேரணி நடத்தினர். மிக நீளமான தேசிய கொடியை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் அருகே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமைத் திருத்த சட்டத்தை கண்டித்து இன்று பேரணி நடைபெற்றது. இதில் 10,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Muslim organization Tamil Nadu Thowheed Jamath holds huge anti-CAA protest in Chennai

ஆலந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு போராட்டக்காரர்கள் குவிந்திருந்தனர். போராட வந்தவர்கள், தங்கள், மனைவி, குழந்தைகள் என குடும்பத்தோடு வந்திருந்தனர்.

உங்க வேலையை நீங்க பாருங்க.. எங்க வேலையை நாங்க பார்த்துக்கிறோம்.. கேரளாவில் கொந்தளித்த ப.சிதம்பரம்உங்க வேலையை நீங்க பாருங்க.. எங்க வேலையை நாங்க பார்த்துக்கிறோம்.. கேரளாவில் கொந்தளித்த ப.சிதம்பரம்

கோஷங்களை எழுப்பியதுடன், சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, பதாகைகள் மற்றும் கட்சிக் கொடிகளை வைத்திருந்தனர். எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வார தொடக்கத்தில், பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, குடியுரிமைச் சட்டத்தின் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் பெரிய பேரணியை நடத்தியதுடன், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Muslim outfit holds huge anti-CAA protest with family members Chennai, Dec 24 (PTI) Hundreds of members of Muslim outfit 'Tamil Nadu Thowheed Jamath' staged a protest here on Saturday with their families in protest against the Citizenship Amendment Act, as demonstrations continued across Tamil Nadu. The protestors gathered near the Alandur court here, raised slogans and held placards and party flags, demanding demanding withdrawal of the Act. Tight security was provided to ensure no untoward incident took place, police sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X