சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவை கிடுகிடுவென முந்தி தள்ளிய முஸ்லீம்கள்.. 3 தொகுதிகளில் கை தூக்கிவிட்ட அபாரம்!

இஸ்லாமிய ஓட்டுக்களை திமுக அள்ளிவிட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election : வேலூரில் திமுகவை கிடுகிடுவென முந்தி தள்ளிய முஸ்லீம்கள்- வீடியோ

    சென்னை: என்ஐஏ மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தும்.. இஸ்லாமிய ஓட்டுக்களை திமுக அள்ளி உள்ளது பெரிய வியப்பாக உள்ளது.

    வேலூர் தொகுதியை பொறுத்தவரை 3 லட்சம் இஸ்லாமியர்கள் உள்ளனர். இந்த ஓட்டுக்களை குறி வைத்துதான் திமுக, அதிமுக கடினமாக உழைத்தது.

    கூட்டணி கட்சி என்றும் பாராமல் அதிமுக பாஜகவை தள்ளி வைத்தது..அந்த கட்சியில் இருந்து ஒருத்தரையும் பிரச்சாரத்துக்கு கூப்பிடவில்லை. முகம்மதுஜானை ராஜ்ய சபா எம்பியாக்கி கூடவே வைத்து கொண்டு பிரச்சாரத்தில் இறங்கியது.

    இதுதான் திமுகவின் பெரிய மைனஸ்.. இல்லையென்றால் வேலூரில் கெத்து வெற்றிதான் இதுதான் திமுகவின் பெரிய மைனஸ்.. இல்லையென்றால் வேலூரில் கெத்து வெற்றிதான்

    தலைமை

    தலைமை

    ஆனால் பிரச்சாரம் நடக்கும்போதே முத்தலாக் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் ஆதரித்துப் பேசி பகீர் கிளப்பினார். அதிமுக தலைமைக்கு என்ன சொல்வதென்றே தெரியாமலே சமாளித்து பிரச்சாரம் செய்தது. இதெல்லாம் போக அமைச்சர் நிலோபர் கபில், அன்வர்ராஜா போன்ற இஸ்லாமிய தலைகளை வைத்து ஓட்டு வேட்டை நடந்தது.

    இஸ்லாமியர்கள்

    இஸ்லாமியர்கள்

    இவ்வளவும் செய்ததால் எப்படியும் இஸ்லாமிய ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என்றுதான் அதிமுக கணக்கு போட்டது. ஆனால், பெரும்பாலான இஸ்லாமிய ஓட்டுக்கள் திமுகவுக்கு சாதகமாக விழுந்துள்ளன. என்ஐஏ மசோதாவை திமுக ஆதரித்ததால், இதன் தாக்கம் வேலூர் தொகுதியில் தென்பட்டுவிடும் என்று ஒரு எண்ணம் இருந்து கொணடே இருந்தது. ஆனால், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும், ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் சட்டன்ற தொகுதிகளின் வாக்குகளே திமுகவை தூக்கி நிறுத்தி உள்ளது.

    திமுக

    திமுக

    அனைக்கட்டு, குடியாத்தம் போன்றவைகளில் உள்ள முதலியார் வாக்குகளை அள்ள நினைத்தது திமுக. அதேபோல, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தலித் வாக்குகளையும் அள்ள நினைத்தது. இங்கெல்லாம் சாதமாக விழாமல், இஸ்லாமிய தொகுதிகளில் விழுந்த ஓட்டுக்கள்தான் திமுகவின் வெற்றிக் காரணமாக அமைந்துள்ளது.

    வாணியம்பாடி

    வாணியம்பாடி

    முதல் சுற்றில் இருந்து கடைசி சுற்றுவரை திமுகவுக்கு நம்பிக்கை தந்து கொண்டே இருந்தது வாணியம்பாடி தொகுதிதான். இதற்கு அடுத்து 90 சதவீதம் ஆம்பூர் தொகுதி, 3-வதாக வேலூர் தொகுதி வாக்குகள் கை கொடுத்துள்ளன. இஸ்லாமிய ஓட்டுக்களை வாங்க மாங்கு மாங்கென வேலை பார்த்த அதிமுகவுக்கு இது பெரிய சறுக்கல்தான். என்னதான் காவி கொடியை தொகுதிக்குள் பறக்க விடாமல் கவனமாக பார்த்து கொண்டாலும், திமுக இந்த விஷயத்தில் மேலே வந்துவிட்டதை பாராட்டியே ஆகவேண்டும்.

    English summary
    The DMK has largely won the Islamic vote in Vellore Constitution like Vaniyambadi, Vellore, and Ambur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X