சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை டிஸ்மிஸ் செய்து வழக்கு பதிய முத்தரசன் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை டிஸ்மிஸ் செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

Mutharasan demands to sack Minister Dindigul Srinivasan

தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - நீலகிரி மாவட்டத்தில் யானைகள் புத்துணர்வு முகாமைத் தொடங்கி வைக்கச் சென்ற இடத்தில், தனது காலணியைக் கழட்டுவதற்கு, பழங்குடியினச் சிறுவனை "டேய் இங்க வாடா" என்று அழைத்து காலணியைக் கழட்டுமாறு கூறியுள்ளார். அமைச்சரின் இந்தச் செயல் பட்டியலின, பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும்.

ஒரு சட்ட அத்துமீறலை அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் உட்பட யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததும் சட்ட மீறலாகும். இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் கூறும் விளக்கங்கள் ஏற்கத்தக்கதல்ல. அதிகார மமதையில், சாதி ஆதிக்க ஆணவத்தோடு பழங்குடியினச் சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

செருப்பை கழட்ட சொன்ன சிறுவனை சிரித்தபடி வரவேற்ற அமைச்சர்.. குடும்பத்தாரிடம் வருத்தம்.. புகார் வாபஸ்செருப்பை கழட்ட சொன்ன சிறுவனை சிரித்தபடி வரவேற்ற அமைச்சர்.. குடும்பத்தாரிடம் வருத்தம்.. புகார் வாபஸ்

Recommended Video

    சிறுவனை செருப்பைக் கழட்ட கூறியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - வீடியோ

    அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட மீறலை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    English summary
    CPI State Secretaray Mutharasan has demanded to sack Minister Dindigul Srinivasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X