சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரத்தக்குழாய் பாதிப்பால் அவதிப்படும் பிஞ்சுக் குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்!

இவரின் இரண்டு மாத குழந்தையின் இதயம் சரிவர இயங்கவில்லை.

சென்னை: இவரின் இரண்டு மாத குழந்தையின் இதயம் சரிவர இயங்கவில்லை. கை கொடுங்கள் இவருக்கு.

தக்ஷ்ஷினுடைய இதயம் இரத்தத்தை எடுத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகிறது, அறுவை சிகிச்சை செய்ய 6 லட்சம் தேவைப்படுகிறது. உதவிக் கரம் நீட்டுங்கள் .

நான் தக்க்ஷை முதன் முதலாக பார்த்த அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த பிஞ்சு விரல்கள் என் விரல்களை இறுகப் பற்றிக் கொண்டு என்னையே பார்த்த அந்த தருணங்கள் அழகானவை. ஆனால் இப்பொழுது அவனை தொட கை சென்றாலே வேதனையால் கத்துகிறான். அவனது ஆடைகள் முழுவதும் வியர்வையால் நனைந்து போகின்றன. அவன் பயப்படும் போதெல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அவனது உடம்பு முழுவதும் மருத்துவ கருவிகளும், டியூப்களும் பொருத்தப்பட்டு, அசைக்க முடியாத நிலையில் இருக்கின்றான். அவனை இந்த வேதனையிலிருந்து காப்பாற்ற நான் போராடி வருகிறேன் என்று தக்ஷ் அப்பா மன வேதனையால் கதறுகிறார்.

My Two Month Old Baby’s Heart Is Not Able To Pump Blood

அவன் சிகிச்சையின்போது அழுத குரல் இன்னமும் எனக்கு கேட்கிறது. வேதனையால் ஒவ்வொரு நாளும் அவன் துடிப்பதை பார்க்கும் போதெல்லாம் மனம் வலிக்கிறது. என்னோடு ஓடி விளையாடிய என் பையன் இப்பொழுது வேதனையில் இருக்கிறான்.

அவன் தான் எங்கள் உலகம், அவன் இருக்கும் போது தான் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். அவன் என்னுடன் சேர்ந்து விளையாடும் போதெல்லாம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறுகிறார் தக்ஷ்னனின் அம்மா.

தக்ஷ்னனுக்கு அடிக்கடி அதிகமாக வியர்க்கும். ஆனால் நாங்க இருந்தது மும்பை என்பதால் அதிக வெப்பம் காரணமாக அப்படி இருக்கிறது என்று நான் நினைத்து விட்டேன். மேலும் நாங்கள் வசிப்பது நாலஷோப்ராவில் உள்ள ஒரு சிறிய வீடு தான். அந்த அளவுக்கு அங்கே காற்று வசதியும் கிடையாது. அதனால் ஆரம்பத்தில் அவனுக்கு வியர்ப்பது குறித்து நாங்கள் அவ்வளவாகக் கவலை கொள்ளவில்லை. ஆனால் கடற்கரை போன்ற காற்றோட்டமான இடங்களில் கூட அவனுக்கு அதிக அளவு வியர்க்க ஆரம்பித்தது.

அப்பொழுதுதான் நான் மிகவும் பயந்து விட்டேன். வேகமாக வீட்டுக்குப் போய் அவனது உடைகளை எல்லாம் கழட்டிப் பார்த்தோம். உடம்பு முழுவதும் நனைந்து போகும் அளவிற்கு வியர்வை அதிகமாக இருந்தது. ஒரு நாள் நான் உணவளிக்கும் போது கூட அவன் சாப்பிட மறுத்தான். காற்றோட்டம் இல்லாததன் காரணமாக அசௌகரியத்தால் சாப்பிட மறுக்கிறான் என்று ஜன்னல்களை எல்லாம் திறந்து வைத்து ஊட்டி பார்த்தேன். ஆனால் அவன் உடலில் பாதிப்பு இருப்பது அப்போது எங்களுக்கு புரியவில்லை என்று தக்ஷ்னனின் அம்மா கண்ணீர் மல்க கூறுகிறார்.

தக்ஷ்னனின் பெற்றோர்கள் அவனை அழைத்துக் கொண்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்கள். ஆனால் அங்கு தக்ஷ்னனின் உடல் நிலையைப் பரிசோதிக்க போதுமான வசதி இல்லாததால் உடனடியாக நானாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல கிட்டத்தட்ட 11/2 மணி நேரம் ஆகும். அவர்கள் நினைத்தார்கள், பையனுக்கு லேசான சுரம் அல்லது காய்ச்சல் இருக்கும் என்று நினைத்து தான் அவர்கள் சென்றார்கள். ஆனால் அவர்களுடைய நினைப்பு எல்லாம் தவறாகிப் போனது.

மருத்துவர்கள் தக்ஷ்னனின் இதய இரத்த குழாய்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவித்தார்கள். இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்றனர். நமது உடலுறுப்புகளுக்கு இரத்தம் சரிவர செல்லா விட்டால் நிலைமை மோசமாகி விடும். தக்ஷன் மிகவும் சீரியஸான நிலையில் உள்ளான். எனவே அவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்றார்கள். அறுவை சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றனர். உடனடியாக தக்ஷ் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். எங்களால் கூட அவனது அருகில் நின்று அவனை கவனிக்க முடியவில்லை.

தக்ஷ்னனின் அப்பா ஒரு பந்தய போட்டிகளில் வேலை பார்ப்பவர். அவருடைய தினசரி வருமானத்தை வைத்து அன்றாட வாழ்க்கையை நடத்துவதே போதாத ஒன்றாக உள்ளது.. இதில் மருத்துவச் செலவு 15,000 ரூபாய் கூட அவரால் பிரட்ட முடியாத சூழல். இப்படி இருக்கையில் தன் மகனின் இதய அறுவை சிகிச்சைக்கு அவரால் அவ்வளவு பெரிய பணத்தை பிரட்ட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் இதை நினைத்து தவித்து வருகிறார்.
அவர்களின் இரண்டு மாத குழந்தை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவனை காப்பாற்ற முடியும். "நாங்களும் அவனை காப்பாற்ற போராடி வருகிறோம். ஆனால் நாங்கள் ஏழ்மையான சூழலில் இருப்பதால் எங்களிடம் போதிய பணம் இல்லை. உறுதியான எண்ணமும் நம்பிக்கையும் மட்டும் தான் எங்கள் கையில் உள்ளது. எங்களுக்கு உங்கள் உதவி தேவை. என் பிஞ்சு குழந்தையை காப்பாற்ற எங்களுக்கு உதவுங்கள்." என்று தக்ஷ்னனின் அம்மா கூறுகிறார்.

My Two Month Old Baby’s Heart Is Not Able To Pump Blood

"என் இரண்டு மாத குழந்தை இதய பாதிப்பால் போராடி வருகிறான். அவனது இதயம் சரிவர இயங்க முடியவில்லை. அவனது உடலை சுற்றி எங்கு பார்த்தாலும் டியூப்களும் கருவிகளும் மட்டுமே பொருத்தப்பட்டு உள்ளது. அவனால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. அவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. நீங்கள் நினைத்தால் எங்களுக்கு உதவி செய்ய முடியும். என் மகனை எனக்கு மீட்டுத் தர முடியும். உதவுங்கள் என்று தக்ஷ்னனின் அப்பா கூறியுள்ளார்.

தக்ஷ்னனின் அறுவை சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. அவனின் பெற்றோர்களால் அதை பிரட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். பிறந்த இரண்டு மாதத்திலேயே தக்ஷ் நிறைய வேதனைகளையும் வலிகளையும் தாங்கி வருகிறான். நாம் நினைத்தால் அவனது உயிரை காப்பாற்றிட முடியும். உங்களின் ஒவ்வொரு உதவிக் கரங்களும் அவனது தந்தைக்கு வலிமையை கொடுக்கும். தயவு செய்து மனித நேயத்துடன் உதவி செய்யுங்கள். உங்களின் சிறு உதவி இந்த குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலை நாட்டும்.
வாருங்கள் உயிர் காக்க உதவி செய்வோம்.

இவர்களுக்கு உதவி செய்ய நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X