சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெல்லப்போறான் விவசாயி.. சீமான் சொன்ன அந்த வார்த்தை.. சோஷியல் மீடியாவை ஆளும் நாம் தமிழர்.. செம பிளான்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் பல வருடமாக கோலோச்சி இருக்கும் அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. எங்கு சென்றாலும் நாம் தமிழர் என்று சொல்லும் அளவிற்கு.. இணையத்தில் அக்கட்சியின் ஆதிக்கம் புதிய உயரத்தை எட்டியுள்ளது.

"மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்கள் தருவதை பெற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து" என்றார் அறிஞர் அண்ணா.. சென்ற நூற்றாண்டு வரை மக்களிடம் செல்ல வேண்டும் என்றால் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக நேரில் சென்று அவர்களை சந்திக்க வேண்டும்.

ஆனால் இந்த ஜென் இசட் நூற்றாண்டில் மக்களை சந்திக்க அவ்வளவு சிரமப்பட வேண்டியது இல்லை. இணையம் ஒன்றின் மூலம் மக்களிடம் கருத்துக்களை தெரிவிக்க முடியும், ஒரு அரசியல் கட்சி இணையம் மூலமே மக்களின் குறைகளை எளிதாக கேட்டறிய முடியும்.. அந்த இணையத்தை நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலுக்காக முறையாக பயன்படுத்தி வருகிறது.

 மாநில உருது மொழி கழகத்தை மாற்றியமைத்தது தமிழக அரசு - இஸ்லாமிய மக்கள் முதல்வருக்கு நன்றி மாநில உருது மொழி கழகத்தை மாற்றியமைத்தது தமிழக அரசு - இஸ்லாமிய மக்கள் முதல்வருக்கு நன்றி

எப்படி

எப்படி

கடந்த இரண்டு மாதமாகவே நாம் தமிழக கட்சி டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. மற்ற கட்சிகளை விட துரிதமாக இந்த செயலில் நாம் தமிழர் இறங்கிவிட்டது. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பையும் உடனுக்குடன் அந்த கட்சியினர் இணையத்தில் டிரெண்ட் செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார்கள்.

பாஜக

பாஜக

2014, 2020 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிபெற அக்கட்சியின் சமூக வலைதள படை முக்கிய காரணமாக இருந்தது. நாங்கள் ஒரு விஷயத்தை அறிவித்தால் போதும் அதை எங்களின் டிவிட்டர் படையே மக்களிடம் கொண்டு சென்றுவிடும் என்று அமித் ஷாவே குறிப்பிட்டு இருந்தார். அந்த அளவிற்கு சமூக வலைதள குழுக்கள் மீது அவருக்கு நம்பிக்கை. அந்த வகையில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இணையத்தை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தி வருகிறது.

நாம் தமிழர்

நாம் தமிழர்

மற்ற கட்சிகளை விட நாம் தமிழர் கட்சியின் டிவிட்டர் பக்கம் மிகவும் ஆக்டிவாக இருக்கிறது. சீமானின் பேச்சுக்களை உடனுக்குடன் இமேஜ் கார்டுகளாக மாற்றி அதை டிரெண்ட் செய்வது, தினசரி ஒரு டிரெண்டை உருவாக்க வேண்டும் என்று ''டாஸ்க்'' உருவாக்கி செயலாற்றுவது என்று நாம் தமிழர் உறுப்பினர்கள் கொஞ்சம் அதிரடி காட்டி வருகிறார்கள். தமிழகத்தில் இணையம் என்பது கிட்டத்தட்ட எல்லோர் வீடுகளிலும் உள்ளது.

ஐடி விங்

ஐடி விங்

இதனால்தான் என்னவோ எல்லா கட்சியும் தமிழகத்தில் ஐடி விங்கை பலப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. திமுக இதில் லேட்டாக என்ட்ரி கொடுத்தாலும் தற்போது அந்த கட்சியின் ஐடி விங் நல்ல வலிமையுடனே இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பில் இருந்தே நாம் தமிழர் கடந்த சில வருடங்களாகவே இணையத்தில் கோலோச்சி வருகிறது. அதிலும் டிவிட்டரில் நாம் தமிழர் உறுப்பினர்கள் எல்லோரும் பச்சை நிறத்தில் விவசாயி காமன் டிபி வைத்து டிரெண்ட் அடித்து வருகிறார்கள்.

வேகம்

வேகம்

தங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரே வழியாக இதை நாம் தமிழர் பார்க்கிறது. திமுக, அதிமுக இவ்வளவு விளம்பரம் தேவை இல்லை என்பதால் நாம் தமிழர் தங்களை பிரபலப்படுத்துவதில் கவனமாக இருக்கிறது. இணைய டிரெண்ட்களில் கவனம் செலுத்த வேண்டும், டிவிட்டரில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று சீமான் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். இதற்காக பல இடங்களில் நாம் தமிழர் கட்சி தனி டீமையும் வைத்து இருக்கிறது. இதுதான் ஒவ்வொரு முறை எளிதாக அந்த கட்சி தேசிய அளவில் டிரெண்ட்களை உருவாக்க முக்கிய காரணம் ஆகும்.

டிரெண்ட்

டிரெண்ட்

கடந்த இரண்டு வாரமாக அடிக்கடி வெல்லப்போறான் விவசாயி டேக் தேசிய அளவில் நாம் தமிழர் கட்சி மூலம் டிரெண்ட் செய்யப்பட்டு வருவதன் பின்னணியும் இதுதான். திமுகவிற்கு எதிரான பல டேக்குகளை அதிமுகவைவிட நாம் தமிழர்தான் தேசிய அளவில் டிரெண்ட் செய்து இருக்கிறது. களத்தில் பல வருடமாக கோலோச்சி இருக்கும் அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளை நாம் தமிழர் கட்சி இணையத்தில் பின்னுக்கு தள்ளி உள்ளது.

சின்னம்

சின்னம்

பெரும்பாலும் கட்சியில் இளைஞர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் இதை எளிதாக டிரெண்ட் செய்கிறது. சீமான் பேச்சுக்கு பின் கேஜிஎப் படத்தின் வீரா வீரா பாடலை வைத்து எடிட் செய்து வைரலாக்குவது தொடங்கி இணையம் மூலமாகவே கூட்டங்களை ஒருங்கிணைப்பது என்று நாம் தமிழர் கட்சி பெரிய அளவில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறது.

களம்

களம்

இணையம்தான் வருங்கால தேர்தல் களம் என்பதால் இங்கு நாம் தமிழர் முதல் ஆளாக வந்து இடம் பிடித்துவிட்டது. ஆனால் இணையம் மட்டுமே தேர்தல் களம் இல்லை... இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யமும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதிமுக, காங்கிரஸ், பாமக, திமுக போன்ற கட்சிகள் இணையத்தில் இன்னும் வளர வேண்டிய அவசியம் உள்ளது. களத்தில் இன்னும் விஸ்வரூபம் எடுக்கவில்லை என்றாலும் இணையத்தில் நாம் தமிழர் கண்டிப்பாக முன்னணி கட்சிகளுக்கு டப் பைட் கொடுத்து வருகிறது.

English summary
Naam Tamilar becomes a huge power in social media with its IT wing strategies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X