சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை.. சென்னையில் நாளை கவன ஈர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: மரபுவழி வேளாளர்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க மாநில அரசை அறிவுறுத்தியும், தனி இடப்பங்கீட்டோடு பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கிறார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Naam Tamilar chief Seeman on devendra kula vellalar

மருதநில வேந்தன் குலத் தோன்றல்களான மரபுவழி வேளாளர்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க மாநில அரசை அறிவுறுத்தியும், தனி இடப்பங்கீட்டோடு பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழர் தாயகம் கட்சி-மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் கு.செந்தில்மள்ளர் தலைமையில் நாளை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் நடைபெறவிருக்கின்றது.

ரூ.5,027 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள்.. 20,351பேருக்கு வேலைவாய்ப்பு.. எடப்பாடியார் அசத்தல்ரூ.5,027 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள்.. 20,351பேருக்கு வேலைவாய்ப்பு.. எடப்பாடியார் அசத்தல்

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றுகிறார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாக ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Naam Tamilar chief Seeman will participate a protest requesting devendra vellalar from SC category.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X