• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

விளக்குமாறு பிஞ்சிடும்.! பிரஸ் மீட்டில் சூடான சீமான்..! என்னங்க இப்படி பேசிட்டாரு! அவரையா சொன்னார்?

Google Oneindia Tamil News

சென்னை : சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் காங்கிரஸ் தலைவர் ஒருவர் குறித்த கேள்வியால் கடும் கோபத்துக்கு ஆளான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான்," விளக்குமாறு பிஞ்சுடும்' எனவும், 'எங்கம்மா விளக்கமாத்தாலயே அடிச்சுடும்' என பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இதனை திமுக, திமுக, மதிமுக, நாதக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு அமைச்சர்களின் ஓசி டிக்கெட்,பிரியாணி-இது திராவிட மாடலா? சீமான்உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு அமைச்சர்களின் ஓசி டிக்கெட்,பிரியாணி-இது திராவிட மாடலா? சீமான்

நாம் தமிழர் சீமான்

நாம் தமிழர் சீமான்

சமீபத்தில் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டி போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய தமிழக காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பேரறிவாளன் விடுதலை தனக்கு ரத்த கண்ணீரை வரவழைப்பதாக கூறினார். அதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே, அதில் எங்கே ரத்தம் வருவது, நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியே இருந்து யோசியுங்கள். என கூறியுள்ளார்.

காங்கிரஸ் மீது விமர்சனம்

காங்கிரஸ் மீது விமர்சனம்

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் ஒருவர் குறித்த கேள்வியால் கோபமடைந்த அவர், " விளக்குமாறு பிஞ்சுடும்' எனவும், 'எங்கம்மா விளக்கமாத்தாலயே அடிச்சுடும்' என பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய போதுதான் இவ்வாறு பேசியுள்ளார் சீமான். இந்த காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் விவாதத்தை தூண்டியுள்ளது.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு


நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான் "தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இல்லை சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கிறது எனக் கூறுகிறார்கள். ஆனால் நாளொன்றுக்கு 5க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள், நடு சாலையில் கொலை உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறி வருவது யாருக்கும் தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார். அப்போது பேரறிவாளனின் விடுதலை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதில் சீமான் போன்றவர்கள் பேசுவதற்கு காரணம் காங்கிரஸ் தான் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக அந்த செய்தியாளர் குறிப்பிட்டார்.

உச்சகட்ட ஆத்திரம்

உச்சகட்ட ஆத்திரம்

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சீமான் விளக்கமாறு பிய்ந்துவிடும், எங்க அம்மாவிடம் இதை சொன்னால் விளக்கமாத்திலேயே அடிப்பார்கள், காங்கிரஸ் இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தது அல்லது எனக்கு என்ன செய்தது என்னை படிக்க வைத்தார்கள் என கேட்டார் அதற்கு இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் தான் என கூறுவார்கள்.. இதனை சொல்லியே பல ஆண்டுகாலமாக இந்தியாவையும் தமிழகத்தையும் காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றி வருகின்றனர். என்ன விடுதலையை வாங்கி கொடுத்து விட்டார்கள், அவர்கள் விடுதலை வாங்கியது நாட்டிற்கா? இல்லை அவர்கள் வீட்டிற்கா" என ஆவேசமாக பேசினார்.

English summary
Seeman coordinator of the Naam Tamil Party, who was outraged by a question about a Congress leader at a press conference in Chennai, has been controversial in saying i will beaten up with broom
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X