சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழைய வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி காட்டுமிராண்டித்தனம்.. சீமான் கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu

    சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகக் காவல்துறையினர் கோரத்தாக்குதல் தொடுத்திருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.

     வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறுவது பொய்யான செய்தி.. காவல்துறை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறுவது பொய்யான செய்தி.. காவல்துறை

    ஆத்திரம்

    ஆத்திரம்

    அங்கு போராடியவர்களை காவல்துறையினர் தாக்கியக் காட்சிகளை இணையத்தில் காணும்போதும், தாக்குதலில் இருவர் உயிரிழப்பு என்ற செய்தியும் கேட்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. பெருஞ்சினமும், ஆத்திரமும் பிறப்பெடுக்கிறது.

    சிறைப்படுத்துதல்

    சிறைப்படுத்துதல்

    தங்களது உரிமைக்காக அறவழியில் போராடுவதும், அரசின் சட்டங்கள் குறித்து மாற்றுக் கருத்துத்தெரிவிப்பதும் அடிப்படை சனநாயக உரிமை. அதனையே மறுத்து அரசின் முடிவை மக்கள் மீது திணிப்பதும், எதிர்ப்போரைத் தாக்குவதும், சிறைப்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

    அரச பயங்கரவாதம்

    அரச பயங்கரவாதம்

    குடியுரிமைச் சட்டத்திருத்தம் எனும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டியதும், அதற்கெதிராகக் குரலெழுப்ப வேண்டியதும் இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் தார்மீகக்கடமையாகும். அந்தவகையில் நாட்டின் மீது பற்றுக்கொண்டு, மதச்சார்பின்மையைக் காக்க அறவழியில் போராடியவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது ஏற்கவே முடியாத பாசிசம்; அரசப்பயங்கரவாதம்.

    அடக்குமுறைகள்

    அடக்குமுறைகள்

    ஆகவே, குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், போராடுவோர் மீதான அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, அறவழியில் போராடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Naam Tamilar Movement Organiser Seeman condemns Chennai Oldwashermenpet police lathicharge on muslims who protest against anti CAA protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X