சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சின்னம் தெளிவாக இல்லை.. நாம் தமிழர் காளியம்மாள் போட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாம் தமிழர் வடசென்னை வேட்பாளர் யார் தெரியுமா?- வீடியோ

    சென்னை: சின்னம் தெளிவாக இல்லையென வடசென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    Naam tamilar party candidate filed petition in HC, our party symbol not clear in voting machine

    அந்த மனுவில், நான் வட சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறேன். எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் அண்மையில் மாதிரி வாக்குச்சீட்டை வெளியிட்டார்.

    சிறப்பு வகுப்பு வேண்டாம், உறவுகளோடு பழகட்டும்! தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பு சிறப்பு வகுப்பு வேண்டாம், உறவுகளோடு பழகட்டும்! தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பு

    அதில் எங்கள் கட்சியின் சின்னம் மங்கலாகவும், தெளிவு இல்லாமலும் இருந்தது. இதனால் எங்கள் கட்சிக்கு வயதானாவர்களும், பார்வை குறைவாடு உள்ளவர்களும் வாக்களிக்க சிரமப்படுவார்கள், இதனால் எங்கள் கட்சியின் சின்னத்தை தெளிவாக எந்திரத்தில் பொறிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த மனுவினை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார். சுப்பிரமணியம் ஆகியோர் விசாரித்தனர். அப்பாது நீதிபதிகள், "ஒரு கட்சியின் சின்னம் வாக்காளர்களின் மனதில் தெளிவாக இருந்தாலே அவர்கள் தானாகவே வந்து ஓட்டுப்போடுவர்கள். மேலும் வாக்கு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தப்பட்டு அனைத்து தொகுதிக்கும் அவை அனுப்பப்பட்டு விட்டதாக தேர்தல்ஆணையம் கூறியுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்றனர்.

    English summary
    Naam tamilar party candidate kaliyammal petition rejected by HC, she ask our party symbol not clear in voting machine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X