சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்களை ஈர்க்கும் ஆண்கள்.. டாக்டர் ஷாலினி போட்ட கமெண்ட்.. கொதித்தெழுந்த நாம் தமிழர் தொண்டர்கள்!

நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்கள் குறித்து டாக்டர் ஷாலினி சர்ச்சையாக பேசி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    டாக்டர் ஷாலினி போட்ட கமெண்ட்.. கொதித்தெழுந்த நாம் தமிழர் தொண்டர்கள்!- வீடியோ

    சென்னை: கொதிச்சு போய் இருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்.. டாக்டர் ஷாலினிக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கிறது.

    விஷயம் இதுதான்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். வழக்கமாக சீமான் வேட்பாளர்களை அறிவித்தால் அதில் புதுமை கலந்திருக்கும்.

    வேட்பாளர்களில் பெரும்பாலானோர் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். அப்படி ஒரு வித்தியாசம் அனைவரும் பெருமை கொள்ளும்படியே அமைந்திருக்கும்!

    யாராவது மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னா.. சப்புன்னு அறைஞ்சிருங்க.. அதிர வைக்கும் கர்நாடக எம்எல்ஏ யாராவது மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னா.. சப்புன்னு அறைஞ்சிருங்க.. அதிர வைக்கும் கர்நாடக எம்எல்ஏ

    சீமானுக்கு பாராட்டு

    சீமானுக்கு பாராட்டு

    இந்த முறையும் 20 பெண்கள், 20 ஆண்கள் என வேட்பாளர்களை அறிவித்தார். இது வேறு எந்த கட்சியும் செய்யாத சிறப்பாகும். இட ஒதுக்கீடு குறித்து வாய் கிழிய பேசும் கட்சிகளே இந்த முறை பெண் வேட்பாளர்கள் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது. ஆனால் சீமான் அதை உடைத்து காட்டி உள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

    பெண் வேட்பாளர்கள்

    பெண் வேட்பாளர்கள்

    இதை பொறுக்காத ஒருசிலர் சீமானுக்கு எதிராக கிளம்பி உள்ளனர். குறிப்பாக சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பதிவில், "இவ்வளோ பொம்புளை புள்ளைங்களை ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான் யா." என்று பதிவிட்டு, கூடவே பெண் வேட்பாளர்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து வெடித்தது சர்ச்சை.

    அவலம்

    அவலம்

    அந்த டிவீட்டை தனது பேஸ்புக்கில் ஷேர் செய்துள்ள மனநல மருத்துவர் ஷாலினி, ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்று பதிவிட்டிருந்தார். அத்துடன் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.

    கொந்தளிப்பு

    கொந்தளிப்பு

    இது நாம் தமிழர் கட்சி தொண்டர்களை கொந்தளிக்க வைத்து விட்டது. #ShameonyouShalini என்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வரும் அளவுக்கு உச்சக்கட்ட ஆத்திரத்தில் தொண்டர்கள் உள்ளனர் அவர்கள். ஷாலினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

    கீழ்த்தரமான சிந்தனை

    கீழ்த்தரமான சிந்தனை

    "தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் #ஷாலினி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.. தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இப்பிரச்சனையை கொண்டு செல்வோம். இது போன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் இணையதளப் பாசறை கோரியுள்ளது.

    மயங்கி விடுவார்கள்

    மேலும் "ஆண்கள் திறமையாக பேசினால் பெண்கள் மயங்கி விடுவார்கள் என்று பெண்ணை ஒரு போகப் பொருளாக கருதி கருத்து தெரிவித்து இருக்கிற மருத்துவர் ஷாலினி பெண் இனத்திற்கே ஒரு அவமான சின்னம்" என்கிறது ஒரு பதிவு

    வக்கிர பார்வை

    "பெண் ஊடகவியலாளர்களை இழிவுப்படுத்திய எஸ்.வி.சேகருக்கு இருந்த வக்கிரப் பார்வைக்குச் சற்றும் சளைத்ததல்ல மருத்துவர் ஷாலினியின் அபத்தப்பதிவு !" என்கிறார் மற்றொருவர்.

    அஞ்சமாட்டேன்

    அஞ்சமாட்டேன்

    இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷாலினி, ''ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருக்கும். சம்பந்தமே இல்லாமல் யார் யாரையோ இதில் கோர்த்து விடுவதும், இப்படியான இன்ன பிற சதிகளும் உச்சகட்ட அறியாமை. அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்'' என்று பதிலடி தெரிவித்துள்ளார்.

    English summary
    Dr Shalini had commented on the Naam Tamilar party women candidates. This is why the volunteers are criticizing Dr Shalini
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X