சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது.. அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் தீர்ந்து போச்சா.. களத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி

சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ரத்த தானம் அளிக்க நாம் தமிழர் கட்சி முயன்று வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இதுதான் நாம் தமிழர் கட்சிக்கும், மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்! சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் இல்லையாம்.. விஷயத்தை கேள்விப்பட்டதும், களத்தில் குதித்து ரத்த சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் அக்கட்சி தொண்டர்கள்!

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சீமான் தனித்து போட்டியிட்டாலும் தோல்வியையே தழுவினார். ஆனால் மக்கள் மனதில் ஓரளவு நிலைத்து நிற்க ஆரம்பித்துவிட்டார். திராவிட கட்சிகளையே முழுமையாக நம்பி இருந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு தன்பக்கம் இழுக்க தொடங்கிவிட்டார்.

இதனால் 1.07 சதவீதத்தில் இருந்து 3.87 சதவீதம் வரை வாக்கு வங்கியை உயர்த்தி விட்டார். தமிழக அரசியலில் 4-வது இடத்தையும் எட்டிபிடித்து விட்டார். இதற்கு முழு, முதற் காரணம் சீமானின் பேச்சும்.. அக்கட்சியினர் கையில் எடுத்து வரும் பிரச்சனைகள்தான்!

தீர்ந்து போய்விட்டது

தீர்ந்து போய்விட்டது

இப்போதுகூட தோற்று போய்விட்டோம் என்று அவர்கள் சோர்ந்துபோய் முடங்கி போய்விடவில்லை. இன்றைக்கு காலையில் இவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது எப்பவுமே கையிருப்பில் ரத்த வங்கியில் ரத்தம் இருக்கும். ஆனால் இன்றைக்கு இது முற்றிலும் காலியாகி விட்டதாம். அதனால் ரத்தம் ஸ்டாக்கில் இல்லாததால், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிக்கல் உள்ளதாக சென்னை அரசு பொது மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

பிரபாகரன்

பிரபாகரன்

இந்த அறிவிப்பை கேட்டதுமே நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் விறுவிறு பணியில் இறங்கிவிட்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உடனடியாக ரத்த தான அழைப்பு விடுக்கப்பட்டது. பிரபாகரன் பிறந்த நாளுக்கு வருடா வருடம் இந்த கட்சியினர் ரத்த தானம் செய்வது வழக்கம்.

குருதி கொடை பாசறை

குருதி கொடை பாசறை"

அவ்வாறு தானமாக அளிக்கும் ரத்தங்களை சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் தருவதும் வழக்கம். இப்படி ரத்த தானத்திற்காகவே நாம் தமிழர் கட்சி "குருதி கொடை பாசறை" என்ற ஒன்றை இயக்கி வருகிறது.

சபாஷ்

சபாஷ்

இப்படி ஒரு பாசறை மற்ற கட்சிகளில் இருக்கிறதா, இல்லையா, அவை செயல்பாட்டில்தான் உள்ளனவா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தேர்தல் தோல்வியை எல்லாம் தூக்கி தூரமாக போட்டுவிட்டு, அவர்களது கடமையை துரிதமாக செய்ய ஆரம்பித்துவிட்டதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

English summary
Chennai Rajiv Gandhi Gov Hospital has announced blood shortage today. Naam Tamilar Party is trying to donate blood to this
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X