சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊருல என்ன பிரச்சினை.. லிஸ்ட் போடுங்க.. கலெக்டர் கிட்ட கொண்டு போய் கொடுங்க.. சீமான் அதிரடி!

கிராம சபை கூட்டத்தை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: கொஞ்சம் கூட நிற்காமல், பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி.. கிராம சபை கூட்டம் சம்பந்தமான விஷயத்தைதான் சீமான் கிளப்பி உள்ளார். கிராம ஊரில் மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் என்னென்ன இருக்கிறதோ அதை லிஸ்ட் போட்டு கொண்டு போய் கலெக்டரிடம் கொடுங்கள் என்று சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிராம சபை என்பது நம் நாட்டில் எப்போதிலிருந்தோ இருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த எந்த அரசுகளும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. கிராமங்களும் தங்களின் வலிமையை அதிகமாக உணரவில்லை.

இப்படி புதைந்து போன விஷயத்தை கொண்டு மக்களிடம் திரும்பவும் கொண்டு வர காரணமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் கமல் என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து பல தலைவர்களும் கிராம சபையை வலியுறுத்தி வருகின்றனர்.

திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்து, அதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்து, மீண்டும் அதிமுகவில் ராதாரவிதிமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்து, அதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்து, மீண்டும் அதிமுகவில் ராதாரவி

கிராம சபை

கிராம சபை

கிராம சபையில், ஏதாவது ஒரு தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அந்த முடிவுதான் இறுதியான முடிவு!! இதில் மக்களின் ஒட்டுமொத்த கருத்தையும் மீறி யாரும் செயல்படவோ, செயல்படுத்தவோ முடியாது. ஏனென்றால், அரசியலமைப்பின் ஒரு அங்கம்தான் கிராம சபை!!

நிராகரிக்க முடியாது

நிராகரிக்க முடியாது

இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளோ, பஞ்சாயத்து தலைவர்களோ மக்கள் முன்னே வைக்கும் கோரிக்கைகளை ஒருக்காலும் நிராகரிக்கவே முடியாது. இந்த விஷயத்தையே சீமானும் வலியுறுத்தி உள்ளார். அறிக்கை மூலம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

எம்பி தேர்தல்

எம்பி தேர்தல்

அதில், "தமிழகத்தில் நான்கு நாட்கள் அதாவது, குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர நாள், காந்தியடிகள் பிறந்த நாள் ஆகிய இந்த நான்கு தினங்களிலும் கண்டிப்பாக கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்ற சட்ட நடைமுறை உள்ளது.

அறிவிப்பு இல்லை

அறிவிப்பு இல்லை

ஆனால் தேர்தல் காரணங்களுக்காக மே 1-ம் தேதி கிராம சபை நிறுத்தி வைக்கப்பட்டது, அதற்கு பிறகு நடத்தவில்லை. இது சம்பந்தமாக அரசும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதனால் மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்களை உடனடியாக நடத்திட வலியுறுத்தி தங்கள் மாவட்ட ஆட்சியரை வரும் 17-ம் தேதி சந்தித்து மனு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மாறுதல்

மாறுதல்

ஏற்கனவே மக்கள் பிரச்சனைகள் எதுவானாலும் சரி. அதில் இறங்கி நாம் தமிழர் கட்சி தூர் வாரி கொண்டிருக்கிறது.. மக்களும் அக்கட்சியை மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ள தயாராகி வருகிறார்கள். இப்போது கிராம சபையை நடத்தும்படி சீமான் மக்களை கிளப்பி விட்டுள்ளது மிகபெரிய மாறுதலையே தேடி தரும் என தெரிகிறது.

English summary
Naam Tamilar Party Seeman insists to conduct the Gram Sabha Meeting soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X