சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயி சின்னத்துடன் தேர்தலை சந்திக்கும் நாம் தமிழர்.. சின்னத்தை அறிமுகப்படுத்திய சீமான்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் லோக்சபா தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை வெளியிட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சின்னத்தை வெளியிட்டு சீமான் செய்தியாளர் சந்திப்பு

    சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் லோக்சபா தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை வெளியிட்டார்.

    லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சி 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்படவில்லை.

    அதற்கு பதிலாக கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களிடம் அறிமுகப்படுத்தினார். இந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களிடம் கூறினார்.

    <strong>EXCLUSIVE:</strong> எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. அமைச்சர்கள் கேட்கவே இல்லை.. விலகிட்டேன்.. செ.கு. தமிழரசன்EXCLUSIVE: எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. அமைச்சர்கள் கேட்கவே இல்லை.. விலகிட்டேன்.. செ.கு. தமிழரசன்

    சின்னம் பேச்சு

    சின்னம் பேச்சு

    செய்தியாளர்களிடம் சின்னத்தை வெளிப்படுத்தி பேசிய அவர், நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு இடைத்தேர்தலை சந்திக்கும். மயில் சின்னத்தை கேட்டிருந்தோம், ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு விவசாயி சின்னத்தை கொடுத்து இருக்கிறது.

    என்ன கொள்கை

    என்ன கொள்கை

    எங்கள் கொள்கையை போலவே விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கவே எங்களுக்கு இந்த சின்னம் கிடைத்துள்ளது. வரும் 22ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்படும். அதன்பின் எங்களுடைய வேட்பாளர்களை வரும் 23 ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் வைத்து அறிவிக்க இருக்கிறோம்.

    முதல்முறை இப்படி

    முதல்முறை இப்படி

    முதல்முறையாக 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட இருக்கிறார்கள். எந்த கட்சியும் இப்படி வேட்பாளர்களை இதுவரை நிறுத்தியதில்லை. 33% இட ஒதுக்கீட்டை பெண் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என போராடி வரும் நாங்கள் எங்கள் கட்சி மூலம் அதை முதலில் கொண்டு வந்து சாதிப்போம்.

    கூட்டணி

    கூட்டணி

    அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற நிலையில்தான் தற்போது கூட்டணிகள் அமைக்கப்படுகிறது. ஹிந்தி தெரிந்தவர் மட்டுமே பிரதமராக முடியும் என்ற முறையை மாற்ற வேண்டும். சுழற்சி முறையில் பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. நாட்டிற்காக போராடும் வீரர்களின் உயிரை அப்பட்டமாக பலி கொடுத்துள்ளது இந்த அரசு, என்று சீமான் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Naam Tamilar Seeman introduces his party symbol ''Farmer'' to the people in Chennai Press-Meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X