சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 வழி சாலை தீர்ப்பு எல்லாருக்கும் சொந்தம்தான்.. ஆனால் "விதை" நாம் தமிழர் போட்டது!

சேலம் பசுமை வழிச்சாலை தீர்ப்புக்கு பின்னால் நாம் தமிழர் கட்சி பெரும் முயற்சிகள் எடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு... தர்மசங்கடத்தில் அன்புமணி- வீடியோ

    சென்னை: உண்மையிலேயே.. 8 வழிச்சாலை தீர்ப்பு யாருடைய முயற்சியால் கிடைத்தது? யாருக்கு இந்த பெயர் போய் சென்றடையும்? என்பதில் இரு பெரும் சர்ச்சைகள் வெடித்து கிளம்பி உள்ளன.

    சென்னை டு சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    "இந்த தீர்ப்பானது, பாமக சார்பில் நான் மேற்கொண்ட சட்டப் போராட்டத்துக்கும், உழவர்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்"என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    அதேபோல நக்கீரன் இதழில், "ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் எவன் கேட்டான் எட்டுவழிச்சாலை என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதனால் இந்த தீர்ப்பில் நக்கீரனின் பங்கு உள்ளது என்கிறது அந்த தரப்பு! நக்கீரன் மட்டுமின்றி சன் நியூஸ் தொலைக்காட்சியும் விவசாயிகளின் அவலத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதில் பங்கேற்றது. ஆனால் உண்மையிலேயே இந்த வெற்றிக்கு யார்தான் காரணம்?

    மோடி வரும் போதெல்லாம் தமிழகத்தில் எதிர்ப்பு.... மீண்டும் டிரெண்டிங்கில் 'கோ பேக் மோடி' மோடி வரும் போதெல்லாம் தமிழகத்தில் எதிர்ப்பு.... மீண்டும் டிரெண்டிங்கில் 'கோ பேக் மோடி'

    குரல் வளைகள்

    குரல் வளைகள்

    8 வழிச்சாலை என்று கார்ப்பரேட்கள் அன்று அறிவித்த உடனேயே விவசாயிகள், தங்கள் உடம்பில், உணர்வில், உயிரில் கலந்த விளைநிலங்களில் அழுது புரண்டார்கள். கண்முன்னே குத்தி கிழிக்கப்பட்ட நிலங்களை கண்டு சுயநினைவு இருக்கும்வரை கதறினார்கள்! எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டன. போராடும் உரிமைகள் நசுக்கப்பட்டன. சொல்லக்கூடிய முடியாத வேதனையில் விவசாய கிணற்றில் உயிரை மாய்த்து கொள்ளவும், பிளேடு, கத்திகளால் தங்களை கிழித்து கொள்ளவும் விவசாயிகள் தயாரானார்கள்!

    மறைக்கப்பட்ட உண்மை

    மறைக்கப்பட்ட உண்மை

    எனவேதான் விஷயம் கோர்ட் வரை சென்றது. இது சம்பந்தமாக முதன்முதலில் வழக்கு தொடுத்தது நாம் தமிழர் கட்சிதான்! அதுமட்டுமல்ல.. இந்த திட்டத்தை எதிர்த்து கைதாகி சென்றது அதே கட்சியை சார்ந்த ஒரு பெண் என்பதும் அப்பட்டமாக மறைக்கப்பட்டு வரும் உண்மை ஆகும்!

    நாம் தமிழர்

    நாம் தமிழர்

    நாம் தமிழர் கட்சி, தான் தொடர்ந்த வழக்கு, மற்றும் அதன் எண்ணை வெளியிட்டுள்ளது. வழக்கு எண் 16961/2018 என்றும் ஆனால் பாமக வழக்கு எண் 20014/2018 என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. இதற்கான சட்டநகல் ஆதாரங்களையும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக ட்வீட்கள் மிக வேகமாக இணையத்தில் பதிவாகி வருகின்றன.

    பிரகலதா ராம்

    "திட்டத்தை எதிர்த்து கைதாகி முதல் முதலில் சிறைக்கு சென்றது நாம்தமிழர் கட்சிதான்....! அப்போது சிறை சென்ற 27 பேரில் ஒரே ஒரு பெண் போராளி...! அப்பெண் தான் நம் விழுப்புரம் நாடாளுமன்ற நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சகோதரி பிரகலதா ராம் என்கிறது ஒரு பதிவு.

    நம் கடமை

    நம் கடமை

    எட்டு வழிச்சாலை வழக்கில் தீர்ப்பு! நாம்தமிழர் தொடர்ந்த வழக்கு எண் 16961/2018. அன்புமணி வழக்கு எண் 20014/2018. அன்புமணி, நாம் தமிழர் தொடர்ந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். மறப்பது மக்கள் இயல்பு... நினைவூட்டுவது நம் கடமை" என்கிறது மற்றொரு பதிவு.

    அறிவிப்பாணை

    "நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தொடுத்த வழக்கில் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு." என்று தெளிவுபடுத்துகிறது மற்றொரு ட்வீட்!

    பாமக குரல்

    பாமக குரல்

    ஆக மொத்தம், நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த இந்த செயலில், தன்னை இணைத்துக் கொண்ட பாமக எதற்காக தன்னை பகிரங்கப்படுத்தி கொள்கிறது என தெரியவில்லை. அன்புமணி தரப்பில் கோர்ட்டில் கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான்.. மக்களுக்காக பாமகவும் குரல் கொடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாதுதான். ஆனால் "விதை"... நாம் தமிழர் போட்டது!

    நன்றிக்கடன்

    நன்றிக்கடன்

    இப்படி நாம் தமிழர் கட்சிதான் வழக்கை முதன்முதலில் பதிவு செய்தது என்பதையும், இதற்காக அக்கட்சியின் பெண் வேட்பாளர் பிரகலதா ராம் முதன்முதலில் சிறைக்கு சென்றார் என்பதையும் நாட்டு மக்கள் உண்மை தன்மையை அறிய வேண்டியதுதான் இவர்களுக்கு செய்யும் உரிய நன்றிக் கடனாக இருக்க முடியும்!

    English summary
    Naam Tamizhar Partywas the first involved in the 8 way Road Project Case and filed the case against this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X