சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துக்க வீட்ல போய் பிரச்சினை என்னன்னு கேட்க முடியுமா.. அப்படிதான் இருக்கு தென் சென்னை.. ஷெரின் வேதனை

தென்சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Naam Tamizhar Sherin: தென் சென்னை மக்கள் குறித்து நாம் தமிழர் வேட்பாளர் ஷெரின்- வீடியோ

    சென்னை: "துக்க வீட்ல போய் உங்களுக்கு என்னங்க பிரச்சனைன்னு கேட்க முடியுமா? அது மாதிரிதான் தென் சென்னை தொகுதி மக்களின் நிலைமையும் உள்ளது"! என்கிறார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரின்!

    தென்சென்னையில் திமுக, அதிமுக இரண்டு ஜாம்பவான் கட்சிகள் நேருக்கு நேராக மோதுகின்றன. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே செல்வாக்கு மிக்கவர்கள்.. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே வாரிசுகள்.. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே கட்சி பலம் உள்ளவர்கள்! இதற்கு நடுவில்தான் உள்ளே புகுந்துள்ளார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரின்!

    புது வேட்பாளர்தான்.. ஆனால் பட்டம் பெற்றவர்! பொறுமையாகவும், நிதானமாகவும் பேசினாலும் ஆழமான கருத்துக்களை பளிச்சென எடுத்து வைக்கிறார்.

    நீட் வேண்டுமா.. வேண்டாமா.. இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18- ப.சிதம்பரம் நீட் வேண்டுமா.. வேண்டாமா.. இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18- ப.சிதம்பரம்

    இணக்கம்

    இணக்கம்

    எதற்காக இந்த நாம் தமிழர் கட்சியில் இணைந்தீர்கள் என்றால், "தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி முறை மற்றும் தற்சார்பு பொருளாதாரம்.. இவை இரண்டும்தான் எனக்கு இந்த கட்சியில் ஈர்த்தது. அதான் இதில் இணக்கமாயிட்டேன்" என்கிறார்.

     ஷெரின் பதில்

    ஷெரின் பதில்

    தென் சென்னையில் பிரபலங்கள் வரிசைகட்டி போட்டியிட உள்ளார்களே, நீங்கள் புது வேட்பாளராக இருந்து என்ன செய்ய போகிறீர்கள், தொகுதி நிலைமை எப்படிதான் உள்ளது என்று கேட்டால் அதற்கு ஷெரின் பதில் இதுதான்:

     மக்களிடம் சேர்ந்துவிட்டோம்

    மக்களிடம் சேர்ந்துவிட்டோம்

    நான்தான் மாற்று.. நான்தான் மாற்று என்ற இந்த பேச்சை கேட்டு மக்கள் ஏமாந்துட்டாங்க. இவர்கள் எல்லாம் ஊடக பலம், பண பலத்தை வைத்து பிரபலங்கள் ஆகிறார்கள். ஆனால் நாங்கள், கொள்கை ரீதியா நாங்கள் என்றைக்கோ மக்கள்கிட்ட போய் சேர்ந்துட்டோம். வெறும் பணத்தை கொட்டி நடத்தப்படும் அரசியலை பற்றி நான் பேசவிரும்பவில்லை. மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் எங்களுடையது.

    வேளச்சேரி

    வேளச்சேரி

    தென்சென்னை மக்களின் தேவைகள் என்ன, குறைகள் என்ன என்று கேட்கவே தேவையில்லை. அடிப்படை வசதிகூட இல்லாமல் தவிக்கிறார்கள். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நிறைய இருக்கு. வேளச்சேரியில் 5 நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீர், அதுவும் பழுப்பு நிறத்தில் இருக்கு.

    ஆசைப்படறேன்

    துக்க வீட்டில போய் உங்களுக்கு என்னங்க பிரச்சனைன்னு கேட்க முடியுமா? முடியாது.. அது மாதிரி என் கண்முன்னாடியே தொகுதி பிரச்சனைகள் தெரிகிறது. அனைத்தையும் சரி செய்யணும்னு நான் ஆசைப்படறேன்" என்கிறார் ஷெரின்.

    English summary
    Naam Tamizhar Party South Chennai Candidate Sherin assures "I Will solve the Basic Problems of South Chennai"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X