• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அடிச்சு ஓடவிட்ருவோம்".. செம ஆவேசம்.. முதல்முறையா கொந்தளித்த காளியம்மாள்.. தொகுதிக்குள் ஒரே பரபரப்பு

|

சென்னை: "உங்க வரிப்பணத்தை கோடிக்கோடியா கொள்ளையடிச்சு அவன் வாழ்ந்துட்டு இருக்கான்.. உங்களுக்கான அரசியலை வென்றெடுக்கல யாரும்.. எளிய மக்களுக்கான வாழ்வை தரறோம்னு நாங்க வந்தால், எங்களையே இப்படி திட்டினால் எப்படி? உங்களுக்காகத்தான் பேசிட்டு இருக்கேன்" என்று காளியம்மாள் முதல்முறையாக ஆவேசத்துடன் பேசிய பேச்சு மக்களின் கவனிப்பை பெற்று வருகிறது.

இந்த முறையும் நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பூம்பூகாரில் களமிறங்கி உள்ளார்.. சீமானின் கட்சியில் மிகப் பெரிய பேச்சாளராக வலம் வருபவர் காளியம்மாள்.. இப்போது பிரச்சார பீரங்கியாகவும் உருவெடுத்துள்ளார்..

நாகப்பட்டினத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பெண் இவர்.. பிகாம் பட்டதாரியும்கூட... மீனவப் பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வருபவர்.

கேள்விகள்

கேள்விகள்

ஆகசிறந்த அரசியல்வாதி இல்லாவிட்டாலும், காளியம்மாளின் யதார்த்தமான, பேச்சும், தெளிவான உச்சரிப்பும், நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவுக்கு கேட்கப்படும் கேள்விகளும் மக்களை திசை திருப்ப வைத்து வருகின்றன.. இந்த எளிமையான பெண், அதிலும், உறுதியான பெண், அதிலும் சாமான்ய மக்களின் மறு குரலாக ஒலிக்கும் காளியம்மாளின் பிரச்சாரம் இந்த முறையும் வைரலாகி வருகிறது.

 அகம்பாவம்

அகம்பாவம்

"ஒருநாள் வரும்.. 2021.. உன் அதிகாரம், ஆணவம், அகம்பாவம், எங்களை அழிச்ச அந்த இன வெறி அனைத்தையும் ஓரங்கட்டி உன்னை தெருவுல நிப்பாட்டி உன்னை தரைமட்டத்துக்கு இறக்கி.. மேலே ஏறி எங்க அண்ணனை நிக்க வெக்கலை? வக்கிறேன்டா.. வக்கிறோம்.. நாங்க வேங்கை மகனெல்லாம் கிடையாது.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க" என்று அன்றே சவால் விட்டவர் தான் காளியம்மாள்.

 வடசென்னை

வடசென்னை

கடந்த 2019 எம்பி தேர்தலில் வடசென்னையில் போட்டியிட்டார்.. 60,515 வாக்குகள் பெற்றார்... இது சதவிகித அடிப்படையில் 6.33 ஆகும்... அந்த வகையில், இம்முறையும் பெரிய தாக்கத்தை நாம் தமிழர் கட்சிக்கு காளியம்மாள் ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.. அதற்கு காளியம்மாளின் சமீபத்திய இந்த பேச்சே மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.

பாட்டி

பாட்டி

தன் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில், காளியம்மாள் ஓட்டு கேட்டு சென்றிருக்கிறார்.. அப்போது அங்கிருந்த வயசான பாட்டி ஒருவர், அதிமுக, திமுகவினர் போல வேறு யாரோ ஓட்டு கேட்டு வந்திருக்கிறார்கள் என்று சலித்து கொண்டு, சரமாரி கேள்விகளை கேட்டுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த காளியம்மாள், மைக்கை பிடித்து கொண்டு, அந்த ஊர்மக்களிடம் பேசிய பேச்சுதான் இது:

 விரட்டுவதா?

விரட்டுவதா?

"ஒருமுறையாவது நேர்மையானவர்களுக்கு, படிச்சவர்களுக்கு, பண்புள்ளவர்களுக்கு என்னைக்குய்யா ஓட்டு போட்டிருக்கீங்க? அப்படி ஓட்டு போடற பிள்ளைங்க யாராவது வந்தால், அவங்களை விரட்டி அடிக்கிறீங்க? 10 வருஷமா ஆட்சியில் இருந்தாரே ஐயா பவுல்ராஜ் அவரை விரட்டி அடிக்க வேண்டியதுதானே? எந்த பிரச்சனைக்கும் வராம, காவிரி நதிநீர் பிரச்சனை நடந்ததே அதுக்கு வராம, மாணவர்கள் போராட்டம் நடந்ததே அதுக்கும் வராம, பெண்கள் பாலியல் வன்கொடுமை நடந்ததே அதுக்கும் வராமல் உதயசூரியன் சின்னத்துல வந்து இங்க ஒருத்தர் திடீர்னு நிக்கறாரே, அவரை நீங்க கேட்க வேண்டியதுதானே இந்த கேள்வியெல்லாம்?

 பெண்கள்

பெண்கள்

ஒருநிமிடத்துக்கு 10 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்காங்க, கேட்டுட்டாங்களா ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்? வீட்டுக்கு வீடு காசு குடுத்துட்டு, சின்னம் ஓட்டு கேட்கறாங்களே, அவங்க கிட்ட கேளுங்க இதையெல்லாம்.. 65 வருஷம் ஆச்சு இல்லை, இந்த 2 கட்சி தவிர வேற யாருக்கு ஓட்டு போட்டு இருக்கீங்க? ஒன்னு அதிமுக, திமுக.. இதுக்குதான் போட்டிருக்கீங்க,.. இந்த 2 கட்சியிலும் ஒரே ஒரு ஏழை எம்எல்ஏவை காட்டுங்க பார்ப்போம்..

திமுக

திமுக

உங்க வரிப்பணத்தை கோடிக்கோடியா கொள்ளையடிச்சு அவன் வாழ்ந்துட்டு இருக்கான்.. அது சரியில்லை, ஏழை மக்களின் வாழ்வை உயர்த்த அரசாங்கத்தை நாமே உருவாக்குவோம்னு படிச்ச புள்ளைங்க யாராவது உங்க வீட்டுல இருந்து ஒரு ஆளு வெளியே வந்து நில்லு.. உங்களுக்கான அரசியலை வென்றெடுக்கல யாரும்.. எளிய மக்களுக்கான வாழ்வை தரறோம்னு நாங்க வந்தால், எங்களையே இப்படி திட்டினால் எப்படி? உங்களுக்காகத்தான் பேசிட்டு இருக்கன்.. போராட்டிட்டு இருக்கோம்.

பாதிப்பு

பாதிப்பு


வேளாண் மசோதா சட்டம் கொண்டு விவசாயிகள் கொண்டு வந்து பாதிக்கப்படறாங்கன்னு போராடறாரே, அந்த திமுகவின் சின்னத்தை இப்படி சுவத்துல எங்க பார்த்தாலும் வரைஞ்சி வெச்சிருக்கீங்களே, விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது, மீத்தேன் எடுக்கிற திட்டத்தை கொண்டு வந்தது ஐயா ஸ்டாலின்தான்.. இதை இல்லேன்னு சொல்ல சொல்லுவீங்களே.. என்கிட்ட உட்காருங்க பேசுவோம்.

கொள்ளை

கொள்ளை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்க எடப்பாடி உதவி பண்ணிட்டு இருக்காரே.. அதை கேக்கறதுக்கு நாதி இருக்கா? ஆறு, கம்மான்னு இருந்த நீர்நிலைகளை கொள்ளை அடிச்சது யாரு? எங்கே எல்லாம்? யாருக்கு ஓட்டு போட்டு வெச்சிருங்க உங்க ஓட்டை எல்லாம்? 500 ரூபாய்க்கு ஓட்டு போட்டீங்க இல்லை, உங்க பிள்ளைங்க வாழறதுக்கு நிலம் இருக்கா? 3 சென்ட் இடமாவது இருக்கா?

 வரிப்பணம் எங்கே?

வரிப்பணம் எங்கே?

ஊர்ல இருந்த பொறம்போக்கு நிலம் எங்கே? நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்களோ, அவங்களுக்கு அதெல்லாம் பரம்பரை சொத்தா மாறி ரொம்ப காலமாச்சு.. அப்பறம் ஏன் இப்பவும் எல்லாத்துக்கும் வரி செலுத்திட்டு இருக்கீங்க? நான் கட்டற வரி என்னவா எனக்கு திரும்பி வரும்முன்னு ஒரு கேள்வி நமக்கு வருதுல்ல? புளுத்து போன ரேஷன் அரிசியா நமக்கு வருது.

அரிசி

அரிசி

ஆன்டிராய்டு செல்போன் தர்றேன்னு எடப்பாடி ஐயா சொல்றாரே, ரேஷன் கடைசியில புளுத்தல் இல்லாமல் அரிசியையே உங்களால ஒழுங்கா தர முடியல.. யாருக்கு வேணும் அந்த 100 நாள் வேலை? மத்த நாட்களில் என்ன செய்யறது? பட்டினியா இருக்கிறதா? இதை கேட்கறதுக்கு ஏதாவது அமைப்பு இருக்கா? இதை கேட்க நாங்க காசு குடுக்காமல் நேர்மையான வழியில் எளிய பிள்ளைங்க வந்தால், எங்களை கேள்வி கேக்கறீங்க..?

ஆவேசம்

ஆவேசம்

கல்வி இலவசம், மருத்துவம் இலவசம் குடிநீர் இலவசம், டாஸ்மாக்கை மூடிவிட்டிருவோம்னு நாங்க சொல்லிட்டு வந்தால், எங்களை கேள்வி கேட்டால் எப்படி? விஏஓ 500 ரூபாய் லஞ்சம் வாங்கினால் நமக்கு கோபம் வருது? ஒரு ஆர்ஐ 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் நமக்கு கோபம் வருது? ஆனால், ஓட்டு போறதுக்கு 1000 ரூபாய் நீங்க லஞ்சம் வாங்கினால் கோபம் வரலையே ஏன்" என்று ஆவேசமாக கேட்டார்.. காளியம்மாள் கேட்ட இந்த பழுத்த நியாயமான கேள்விக்கு பதில் சொல்வது யார்?!

English summary
Naam Tamizhar Party Kaaliyammal Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X