• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"உன்னை தெருவுல நிப்பாட்டி.. எங்க அண்ணனை மேல நிக்க வெக்கல".. சவால்விட்ட காளியம்மாள்.. மீண்டும் விசிட்

|

சென்னை: "ஒருநாள் வரும்.. 2021.. உன் அதிகாரம், ஆணவம், அகம்பாவம், எங்களை அழிச்ச அந்த இன வெறி அனைத்தையும் ஓரங்கட்டி உன்னை தெருவுல நிப்பாட்டி உன்னை தரைமட்டத்துக்கு இறக்கி.. மேலே ஏறி எங்க அண்ணனை நிக்க வெக்கலை? வக்கிறேன்டா.. வக்கிறோம்" என்று சவால் விட்டாரே காளியம்மாள், ஞாபகம் இருக்கா? இந்த முறையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்க போகிறார்.. அதுமட்டுமல்ல, சீமானுடன் இணைந்து பிரச்சார பீரங்கியாய் முழங்க இருக்கிறார்..!

காளியம்மாள் - இந்த பெயர் கடந்த முறை எம்பி தேர்தலின்போதிருந்துதான் ஒலிக்க தொடங்கியது.. சீமானின் நாம் தமிழர் கட்சியில் மிகப் பெரிய பேச்சாளராக வலம் வருபவர் காளியம்மாள்..

இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம்... மீனவ சமுதாயத்தை சேர்ந்த பெண்.. பிகாம் பட்டதாரியும்கூட... மீனவப் பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வருபவர்.

உறுதியான பெண்

உறுதியான பெண்

அதற்காக இவர் ஒன்றும் ஆகசிறந்த அரசியல்வாதி எல்லாம் இல்லை... ஆனால் இவரது பேச்சு பழுத்த அரசியல்வாதியை விடவும் மிஞ்சும்.. எளிமையான பெண்.. ஆனால் உறுதியான பெண்.. சாமான்ய மக்களின் மறு குரல் காளியம்மாள்.. யதார்த்தமான, பேச்சும், தெளிவான உச்சரிப்பும், சுருக், நறுக் கேள்விகளும் காளியம்மாளின் ஹைலைட்!

தேர்தல்

தேர்தல்

கடந்த2019 எம்பி தேர்தலில் வடசென்னையில் போட்டியிட்டார்.. 60,515 வாக்குகள் பெற்றார்... இது சதவிகித அடிப்படையில் 6.33 ஆகும்... ஆனால், அப்போது காளியம்மாளின் பிரச்சார பேச்சுக்கள்தான் சோஷியல் மீடியாவில் வைரலானது..

ஓட விட்ருவோம்

ஓட விட்ருவோம்

"ஒரு தமிழன் மேலயாவது, இன்னொரு படுகொலை நாள் வரும், அதுக்கு நாம இரங்கல் தெரிவிக்கலாம்னு எவனாச்சும் அரசியல் பண்ற எண்ணத்தோடு இந்த பக்கம் வந்தீங்க உள்ளே.. நாங்க வேங்கை மகனெல்லாம் கிடையாது.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க" என்று கர்ஜித்தவர். "சீமானுடைய தம்பி, தங்கச்சிங்க சீமான் மாதிரி பேசாம, "ஆக.. ஆக.." ன்னு பேச சொல்றீங்களா?" என்று கேள்வி எழுப்பி நக்கலடித்தவர்..

என் அண்ணன்

என் அண்ணன்

"ஒருநாள் வரும்.. 2021.. உன் அதிகாரம், ஆணவம், அகம்பாவம், எங்களை அழிச்ச அந்த இன வெறி அனைத்தையும் ஓரங்கட்டி உன்னை தெருவுல நிப்பாட்டி உன்னை தரைமட்டத்துக்கு இறக்கி.. மேலே ஏறி எங்க அண்ணனை நிக்க வெக்கலை? வக்கிறேன்டா.. வக்கிறோம்" என்று சவால் விட்டவர்.

தெகுதி

தெகுதி

இன்று இதே காளியம்மாள் மீண்டும் போட்டியிட போகிறார்.. நேற்று சீமான் அக்கட்சி வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டார்.. தஞ்சாவூர், கும்பகோணம், பூம்புகார், ராமநாதபுரம், திருவாடானை, திருப்பூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, திருவையாறு, விழுப்புரம், எனத் தமிழகம் முழுக்கப் பரவலாக 47 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியலும் வெளியானது... அதில், காளியம்மாளும் ஒருவர்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

கடந்தமுறை வட சென்னையில் போட்டியிட்ட காளியம்மாள், இந்தமுறை பூம்புகார் தொகுதியில் போட்டியிடுகிறார்... வழக்கமாக சீமான் கட்சியில் எல்லாருமே நன்றாக பேசக்கூடியவர்கள்தான் என்றாலும், சீமானுக்கு அடுத்தபடியாக பேச்சுக்களம் காண காளியம்மாள் பிரச்சார பீரங்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றே தெரிகிறது.. போட்டியிடப் போவது பூம்புகார் என்றாலும் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்யவும் திட்டம் உள்ளது.. அதற்கான சுற்றுப்பயண ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.காளியம்மாளின் பிரச்சார பேச்சில் யாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போகிறார்களோ..!

 
 
 
English summary
Naam Tamizhar Party Kaaliyammal contest in Poompuhar Constitutency
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X