சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஷ்யா கடன் கேட்டுச்சா.. கடன் கொடுக்கிற அளவுக்கு இந்திய பொருளாதாரம் உயர்ந்திடுச்சா.. சீமான் கேள்வி!

பிரதமரின் அறிவிப்பு குறித்து சீமான் கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "7,200 கோடியை ரஷ்யாவிற்கு கடனாக கொடுக்கிறேன்னு இவரு சொல்றாரே.. ரஷ்யா கேட்டுச்சா கடன்? இல்லைன்னா, ரஷ்யாவுக்கு கடன் குடுக்கிற அளவிற்கு நாம பொருளாதாரத்துல மேம்பட்டு, எல்லா வசதிகளும் மக்களுக்கு கிடைச்சிடுச்சா?" என்று பிரதமர் மோடியை சீமான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி செப்டம்பர் 3ம் தேதி ரஷ்யா புறப்பட்டு சென்றிருந்தார். 5ஆம் தேதி விளாடிவாஸ்டோக் நகரில் நடந்த மாநாட்டிலும் பங்கேற்று பேசினார்.

அப்போது,"மத்திய அரசின் 'கிழக்கு நோக்கி' கொள்கையின் அடிப்படையில் ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக 7,200 கோடி கடன் அளிக்கப்படும்" என்று அறிவித்து விட்டு வந்தார்.

கண்டனம்

கண்டனம்

பிரதமரின் இந்த பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் "எங்க அப்பத்தா ஒரு லிட்டர் பால் வெச்சிருக்கு. அதுக்கு 100 மில்லி போதும். மீதி பாலை விக்க போகுது. 100 மில்லி, 50 மில்லின்னு ஒவ்வொரு குடும்பத்துக்கும் விக்கும்போது, அந்த காசை எப்படி திரும்பி வாங்கும்?

ஆட்டோ மொபைல்

ஆட்டோ மொபைல்

செல்போன் டிரான்சேக்‌ஷன், டெபிட் கார்டு, கிரிடிட் கார்ட் எகனாமியில் எப்படி இது சாத்தியம்? அதனால குறிப்பிட்ட விழுக்காடு மக்கள் மொத்தமாகவே வாங்கிற திறனை இழந்துட்டாங்க. டீமானிடசைஷேஷன் மற்றும் ஜி எஸ்டி போன்ற தவறான நடவடிக்கைகளால் மக்கள் வாங்கும் திறனை இழந்துள்ளனர். இதன் காரணமாகத்தான் ஆடை உற்பத்தி, தேயிலை, ஆட்டோ மொபைல் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்.

கோடி கடன்

கோடி கடன்

இதிலிருந்து எப்படி மீண்டு வர்றதுன்னு தவித்து கொண்டிருக்கும் சூழலில், ரிசர்வ் வங்கியில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி எடுக்கறது என்பது ஒரு பேராபத்துக்கு உரியது. இதைவிட இக்கட்டான நிலையில்கூட இந்திய அரசு அதை செய்யல. நாமளே 57 லட்சம் கோடிக்கு மேல கடனை வெச்சிருக்கோம்.

முதல்வர்

முதல்வர்

ரூ.2500 கோடி முதலீடுகளை தமிழகம் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு முதல்வர் நாடுநாடாக சுற்றிவருகிறார். இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடியில இருக்கிறோம். ஆனால், பிரதமர் 7,200 கோடியை ரஷ்யாவிற்கு இவர் கடனாகக் கொடுக்கிறேன்னு சொல்றாரு. ரஷ்யா கேட்டுச்சா கடன்? இல்லை, ரஷ்யாவுக்கு கடன் குடுக்கிற அளவிற்கு நாம பொருளாதாரம் மேம்பட்டு, இங்கு எல்லா வசதிகளும் மக்களுக்கு கிடைச்சிடுச்சா?

பொறுப்பற்ற நிர்வாகம்

பொறுப்பற்ற நிர்வாகம்

இங்க ஒரு அவசர ஊர்தி இல்லை, ஸ்ட்ரெச்சர் இல்லை.. சிலிண்டர் இல்லை.. அல்லாடிக்கிட்டு இருக்கிறோம், ரஷ்யாவிற்கு 7,200 கோடியை தூக்கிக்கொடுப்பது எவ்வளவு பெரிய முரணானது. ஒரு பக்கம் மாநில முதல்வர் 2500 கோடி முதலீடு கொண்டு வர நாடு நாடா சுத்திட்டு இருக்கும்போது, அதே நாட்டில் 7200 கோடி கடன் அளிக்கப்படும் என்று சொல்றதை எப்படி பார்க்கிறது? பொறுப்பற்ற நிர்வாகம், நாட்டின் மீது அக்கறையற்ற ஆட்சி முறையைதான் காட்டுது" என்றார்.

English summary
Naam Tamizhar Party Seeman has criticized PM Modis announcement of Loan to Russia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X