• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஐயா நியாயமார்களே.. உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. கொரோனா வந்தா எங்க போவீங்க.. சீமான் சுளீர்

|

சென்னை: "ஐயா நியாயமார்களே.. ஜோதிகா சொன்னதுக்கு இவ்ளோ கோவம் வருதே.. உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி.. இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. உங்களுக்கு ஒருவேளை கொரோனா வந்தால், நீங்க முதல்ல கோயிலுக்கு போவீங்களா? ஆஸ்பத்திரிக்கு போவீங்களா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க" என்று சீமான் காட்டமான கேள்விகளை அடுக்கடுக்க கேட்ட ஒரு அறிக்கையை விடுத்துள்ளார்.

சமீபத்தில் கோயில் சர்ச்சை விவகாரத்தில் ஜோதிகா சிக்கியிருந்தார்.. அது சர்ச்சையாக்கப்பட்டது.. திரித்து கூறப்பட்டது.. விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன... தடித்த வார்த்தைகள் வெளிப்பட்டன.. ஆனால் இவை எல்லாம் ஒரு தரப்பில் இருந்தே வெளியாகின.

பெரும்பாலானோர் ஜோதிகா பக்கமே நின்றனர்.. ஜோதிகா அப்படி என்ன தப்பா கேட்டுவிட்டார் என்று எதிர்கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்போது ஜோதிகா பேசியதற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஏகப்பட்ட விஷயங்களை முன்வைத்து நறுக் நறுக்கென கேள்வியை எழுப்பி உள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

பசி, பட்டினி

பசி, பட்டினி

"ஊரடங்கால் 45 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பசி, பட்டினியோடு உறங்கும்போது வராத கோபம், பேரிடர் காலத்திலும் மத்தியில் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்கள் பாதுகாப்புச் சாதனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்குக்கூடத் தடைவிதிக்கிறபோது வராத கோபம். மாநிலங்களிடமிருந்து வரி வருவாயைப் பெற்றுக்கொண்டு அதனைப் பேரிடர் காலத்திலும் திருப்பித் தர மறுக்கும்போது வராத கோபம்.

தெலுங்கானா

தெலுங்கானா

ஊரடங்கால் தாய்நிலம் திரும்ப முடியாததால் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கால் கடுக்க நடந்தே சென்று உழைக்கும் மக்கள் உயிரைவிடும்போது வராத கோபம். தெலுங்கானாவில் ஒரு குடும்பத்தினரும், உபியில் 5 குழந்தைகளும் அவர்களது தாயும் ஊரடங்கை எதிர்கொள்ள முடியாது உணவுக்கு வழியின்றித் தற்கொலை செய்து மாண்டபோது வராத கோபம்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

அடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது அடித்தட்டு மக்கள் அல்லல்படும்போது விளக்கில் நெருப்பேற்றி வாசலில் வைக்கச் சொன்னபோது வராத கோபம். கையுறையும், பாதுகாப்புச் சாதனங்களும் சரிவரக் கிடைக்காதபோது மருத்துவர்களுக்காகக் கைதட்டுங்கள் எனக் கூறி கொண்டாட்ட மனநிலையை மக்களிடையே உருவாக்க முயன்றபோது வராத கோபம்.

முதலாளிகள்

முதலாளிகள்

நாட்டின் பொருளாதாரத்தை அதாளபாதாளத்திற்குத் தள்ளிவிட்டு தனிப்பெரு முதலாளிகளுக்கு 68,000 கோடியைத் தாரைவார்த்தபோது வராத கோபம். நாட்டு மக்கள் பேரிடரில் சிக்கித் தவிக்கும்போதும் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி மதத் துவேசத்தை ஏற்படுத்த முயன்றபோது வராத கோபம்.

அறிவிப்பு

அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்களைச் சுமந்து செல்லும் வாகனங்களுக்கும் இந்த நேரத்திலும் சுங்கவரி உயர்த்தி மக்களின் தலையில் சுமையேற்றியபோது வராத கோபம். பல வருடம் போராடி பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை எந்தவித முன் அறிவிப்புமின்றி அதன் தன்னாட்சியைப் பறித்து மத்திய அமைச்சரவைக்குக்கீழ் கொண்டு வந்த பொழுது வராத கோபம். நாம் கோயில்களுக்குச் செலவு செய்வதைப் போல கல்விக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யலாம் என ஜோதிகா சூர்யா கூறியதற்கு வருகிறதா?

கோயில்கள்

கோயில்கள்

உலகமெல்லாம் எல்லா வழிபாட்டுத்தலங்களும் மூடியிருக்கும் பொழுது மருத்துவமனைகளின் கதவுகள் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோயிலுக்குள் நீட்டப்படும் தட்டில் விழும் பணம் காணிக்கையென்றும், கோயில் வெளியே நீட்டப்படும் தட்டில் விழும் பணம் பிச்சையென்றும் பார்க்கும் பார்வையை மாற்றுங்கள்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
naam tamizhar party seeman supports actress jyothika
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X