சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐயா ராமதாஸா இப்படி பேசினார்? அதிர்ச்சியாக உள்ளது.. "சிறுபான்மை" என்று சொல்லாதீங்க.. சீமான் பேட்டி

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தியது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐயா ராமதாஸா இப்படி பேசினார்? அதிர்ச்சியாக உள்ளது.. 'சிறுபான்மை' என்று சொல்லாதீங்க.. சீமான் பேட்டி

    சென்னை: "சிறுபான்மை என்று யாரையுமே சொல்லாதீங்க.. என் முன்னாடி அந்த வார்த்தையை சொல்லாதீங்க.. அதிமுக அரசு மிகப்பெரிய வரலாற்று தவறை செய்துவிட்டது.. ஐயா ராமதாஸ் போன்ற ஒரு தலைவர், கூட்டணி தர்மத்துக்காக இப்படி பேசியதை அறிந்து அதிர்ச்சியில் உறைஞ்சு போய்ட்டேன்.. ஐயாவா இப்படி பேசினார்?" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    குடியுரிமைச் சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார்.

    டாக்டர் ராமதாஸ்

    டாக்டர் ராமதாஸ்

    அப்போது, "கூட்டணி தர்மத்துக்காவே ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்த கருத்து குறித்தும், குடியுரிமை திருத்த மசோதா சம்பந்தமாகவும் செய்தியாளர்கள் கேள்விகளை முன் வைத்தனர். அப்போது சீமான் சொன்னதாவது:

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    "அதிமுக அரசு மிகப்பெரிய வரலாற்று தவறை செய்துவிட்டது.. இருக்கிற ஓராண்டு ஆட்சியை தக்க வைப்பதற்காக இவ்வளவு பெரிய பிழையை செய்திருக்கவே கூடாது.. அதிலும் மதிப்பு மிக்க ஐயா ராமதாஸ் போன்றோர்கள் இப்படி ஒரு வார்த்தையை பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவர் திமுக, அதிமுக கூட்டணியில் இருந்தபோதெல்லாம் செய்த தவறுகளை நேர்மையாக சுட்டிக்காட்டிய ஒரு தலைவர், கூட்டணி தர்மத்துக்காக இப்படி பேசிய அதிர்ச்சியில் உறைஞ்சு போய்ட்டேன்.. ஐயாவா இப்படி பேசினார்?

    பெரிய துரோகம்

    பெரிய துரோகம்

    அதிமுக அரசு எடுத்த நிலைப்பாடு என்பது மிகப்பெரிய துரோகத்தை தமிழக மக்களுக்கு செய்து விட்டது. வரலாற்று தவறு இது.. சிறுபான்மை என்ற வார்த்தையை நான் அருவெறுக்கிறேன்.. சிறுபான்மை என்று யாரையுமே சொல்லாதீங்க.. இந்த நாட்டில் பிரிக்கும் இவர்கள்தான் சிறுபான்மையினர்.. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கூறுபடி மக்கள்.. மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிடுவதே கிடையாது.. உலகம் முழுவதும் மொழி, இனத்தை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது.

    மொழிகள்

    மொழிகள்

    நீங்க ஐரோப்பிய நாடு எடுத்துக்கிட்டால், எல்லாரும் கிறிஸ்தவன்தான்.. அது ஏன் அத்தனை நாடா பிறந்தது? பாகிஸ்தான்ல எல்லாரும் இஸ்லாமியர்தான்.. ஏன் பங்களாதேஷ் பிரிஞ்சது? இந்த அடிப்படையை சிந்தித்து பார்க்கணும்.. ஐரோப்பிய நாட்டில் எல்லாரும் கிறிஸ்தவர்கள்.. அப்பறம் ஏன் டென்மார்க், ஜெர்மன், நார்வே, பிரான்ஸ்? ஏன் என்றால் மொழியாக பிரிந்து அவை தனியே சென்றன.

    சிறுபான்மை

    சிறுபான்மை

    இங்கு இஸ்லாமியர்களுக்கு ஒரு மாநிலம், கிறிஸ்தவர்களுக்கு ஒரு மாநிலம் என்று பிரிக்கப்படவில்லை.. மொழிவழியாகத்தான் தேசிய நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே தவிர சாதி, இனம் வழியில் இல்லை. சிறுபான்மை என்ற வார்த்தையை என் முன்னாடி திரும்ப திரும்ப சொல்லாதீங்க.. பேசாதீங்க.. எனக்கு முன்னாடி பேசாதீங்க" என்றார்.

    English summary
    Naam Thamizhar katch protest against Citizenship in chennai and seeman slams aiadmk gov
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X