சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 95 ஆவது பிறந்த நாள்! பெரியார் சூட்டிய புதுப் பெயர்! ருசிகர தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95 ஆவது பிறந்த நாளான நாளை, அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது.

கணேசன் என்ற பெயருடன் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு, சிவாஜி என்ற புதுப்பெயரை சூட்டி சிவாஜி கணேசன் என மாற்றியவர் பெரியார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

யார் இந்த சிவாஜி கண்ணன்.. திடீரென இவரது வீடியோ லைக்குகளை குவிக்க காரணம் என்ன?யார் இந்த சிவாஜி கண்ணன்.. திடீரென இவரது வீடியோ லைக்குகளை குவிக்க காரணம் என்ன?

நடிகர் திலகம்

நடிகர் திலகம்

நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1.10.1927 ஆம் ஆண்டு பிறந்தார். 'நடிப்பு தனது மூச்சு என்றும், நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்' என சிவாஜி கணேசன் குறிப்பிட்டுள்ளார். குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் ஆர்வம் கொண்டு பல்வேறு நாடகங்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்கிற நாடகத்தில் சிவாஜியாக நடித்தார். அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் "சிவாஜி கணேசன்" என்று பெயர் சூட்டினார்.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகி 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 2 இந்தி படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார். இவர் நடித்த கப்பலோட்டியத் தமிழன், இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் காண்போரின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சிவாஜி கணேசன் நடிப்பு திறமையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில், நாளை காலை 9.45 மணியளவில் சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

சிவாஜி குடும்பத்தினர்

சிவாஜி குடும்பத்தினர்

முதலமைச்சர் மரியாதை செலுத்த செல்லவுள்ளதால் சிவாஜி கனேசனின் குடும்பத்தினரும் மணிமண்டபத்துக்கு வருகை தரவுள்ளார்கள். மேலும், நடிகர் சங்கம் சார்பாகவும் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.

English summary
Nadigar thilagam Sivaji Ganesan 95th birthday tomorrow, the government will pay tribute to his statue by garlanding it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X