சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குளிரும் தமிழகம்.. எங்கும் பலத்த மழை.. சுழட்டி அடிக்கும் பலத்த காற்று.. பெருக்கெடுக்கும் வெள்ளம்!

வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: பெய்து வரும் பலத்த மழையால் தமிழகமே குளிர்ந்து வருகிறது.. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.. கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும் வீசிவருகிறது.. இதனால், வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 Nagai Fishermen did not go to sea due to Heavy Rain

மேலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது... மாவட்ட நிர்வாகங்கள் அதற்கான முன்னெச்சரிக்கைகளில் ஈடுபடுத்தி கொண்டு வருகின்றன.

அதற்கேற்றபடி தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்களாக கனமழை பெய்தபடியே உள்ளது.. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் வினாடிக்கு 70,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று இரவு வினாடிக்கு 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

 Nagai Fishermen did not go to sea due to Heavy Rain

அதேபோல, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடி அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியை எட்டியது... ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்திருக்கிறது.\

லேட்டாவெல்லாம் வரவே கூடாது.. எப்பவுமே லேட்டஸ்டாதான் இருக்கணும்.. உதயநிதியின் செம பிளான்! லேட்டாவெல்லாம் வரவே கூடாது.. எப்பவுமே லேட்டஸ்டாதான் இருக்கணும்.. உதயநிதியின் செம பிளான்!

இதனிடையே, தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.. இதையடுத்து, நாகை வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 3,000 மீனவர்கள் பலத்த காற்று வீசி வருவதால் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்லவில்லை. எனினும், பரவலான மழையால் தமிழகமே குளிர்ந்து வருகின்றது.

English summary
Nagai Fishermen did not go to sea due to Heavy Rain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X