சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெல்ல போவது ஜூனியரா.. இல்லை சீனியரா.. தமிழக பாஜகவில் வரலாறு காணாத கடும் போட்டி!

அடுத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்

    சென்னை: தமிழக பாஜகவின் சீனியருக்கும் - தமிழக பாஜகவின் ஜூனியருக்கும்தான் ஏகப்பட்ட போட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. மாநில தலைவர் பதவி யாருக்கு என்பதில்தான் இந்த போட்டியே!

    தமிழிசை தெலுங்கானா ஆளுநராக போய், இத்தனை மாதங்கள் ஆகியும் இன்னும் தமிழக பாஜக தலைமை பொறுப்பில் யாருமே நியமனம் செய்யப்படாமல் உள்ளது.

    பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், முருகானந்தம், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, கே.டி.ராகவன் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு அந்த பதவி வேண்டும் என்று கேட்டு வந்தனர். இவர்கள் ஒவ்வொருவருமே பாஜக தலைமையுடன் மிக நெருக்கமானவர்களாகவும், ஒவ்வொரு வகையில் நன் மதிப்பை தலைமையிடம் பெற்றவர்களாகவும் இருப்பதுதான் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

    ப.சிதம்பரம் வரவேற்பு வைபவம்... ஆட்களை திரட்ட படாதபாடு பட்ட கார்த்தி ப.சிதம்பரம் வரவேற்பு வைபவம்... ஆட்களை திரட்ட படாதபாடு பட்ட கார்த்தி

    தேர்தல் பிஸி

    தேர்தல் பிஸி

    மேலும் மகாராஷ்ரா உள்ளிட்ட தேர்தல் நடக்க உள்ளதால், அதில் கவனத்தை செலுத்தி வருவதாகவும், அந்த தேர்தல் முடிந்த பின்னரே தமிழகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று செய்திகள் வந்தன. ஆனால் தேர்தல் முடிந்தும் தலைமை பொறுப்பில் யாரையும் நியமனம் செய்யவில்லை.

    அமித்ஷா

    அமித்ஷா

    இதனிடையேதான், அமித்ஷாவின் அழைப்புப்படி முருகானந்தம் டெல்லி சென்றுவிட்டு வந்தார். எதற்கான இந்த அழைப்பு என்பது தெரியாமலேயே, முருகானந்தம்தான் அடுத்த தலைவர் என்ற தகவலும் வேகமாக பரவியது. ஆனால், அதுவும் மெதுவாக அடங்கிப்போய்விட்டது. இப்போது, இன்னொரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி லிஸ்ட்டில் முதன்மையாக இருப்பவர்கள் 2 பேர்.. ஒருவர் கட்சியின் மிக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், அடுத்தவர் சமீபத்தில் வந்து கட்சியில் சேர்ந்த நயினார் நாகேந்திரன்.

    அத்வானி

    அத்வானி

    இவர்கள் இருவரையும்தான் டெல்லி தலைமை அழைத்துள்ளது. பொன்.ராதாவை பொறுத்தவரை, கட்சியின் சீனியர் மட்டுமில்லை.. மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.. ஏராளமான பதவிகளையும் இதே பாஜக ஆட்சியில் வகித்தவர்.. அத்வானியின் மனதில் இடம் பிடித்தவர்.

    மாநில துணை தலைவர்

    மாநில துணை தலைவர்

    அதேபோல, நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர். அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதும் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர். அது மட்டுமல்ல.. உடனடியாக அவருக்கு கட்சியில் மாநிலத் துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

    எம்பி தொகுதி

    எம்பி தொகுதி

    நடந்து முடிந்த எம்பி தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் கருப்பு முருகானந்தம் போட்டியிட விரும்பினார். இவர், தீவிர பொன். ராதாவின் ஆதரவாளர் ஆவார்.. எப்படியாவது கருப்பு முருகானந்தத்துக்கு சீட் வாங்கிதர பொன்.ராதாவும் முயன்றார்.. ஆனால், மேலிடத் தலைவர்கள் தொடர்பு மூலம் நயினார் நாகேந்திரன் தொகுதியைத் தட்டி சென்றுவிட்டார்.

    சீனியர்

    சீனியர்

    இப்போது, தலைமை பதவிக்கும் பொன்.ராதாவுக்கு நிகராக நயினார் பெயரும் அடிபடுவதும், இருவரும் டெல்லி சென்றுள்ளதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பொன்.ராதா என்னதான கட்சியின் சீனியர் என்றாலும், அவருக்கு தலைமை பதவி வாய்ப்பு குறைவு என்றே சொல்கிறார்கள்.

    பாஜக கணக்கு

    பாஜக கணக்கு

    எப்படியும், நயினாருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாம்.. இதற்கு காரணம், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த நயினார் போன்றவர்களால் எளிதாக முடியும் என்று பாஜக கணக்கு போடுகிறது.. உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் இதே பாணியைதான் பாஜக பின்பற்ற நினைக்கிறது.. தமிழக பாஜகவுக்கு ஒரு இளம் தலைவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது பாஜக எப்போதோ எடுத்த முடிவு.. அந்த வகையில் பார்த்தாலும், நயினார் பொருத்தமானவர் என்றே சொல்கிறார்கள்.

    தலைமை முடிவு

    தலைமை முடிவு

    திராவிட கட்சிகளின் உதவி இல்லாமல் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை பாஜக தலைமை நன்கு உணர்ந்துள்ளது.. அந்த வகையில், பொன்.ராதாவைவிட, நயினாருக்கு திராவிட பிம்பம் உள்ளதால், அதனையும் பயன்படுத்தி கொள்ள தலைமை நினைப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ, வரும் 15-ம் தேதிக்குள் தலைவர் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளதால், யார் அந்த தலைவர்? சீனியரா? ஜூனியரா என்பது விரைவில் நமக்கு தெரிந்துவிடும்.

    English summary
    there is tough competition between nainar nagendran and senior leader pon radhakrishnan, but nainar likely to be selected as next tn bjp president
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X