சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவில் குஷ்பு இணைந்தது பலம்தான்- நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் குஷ்பு இணைந்தது பலம்தான் என பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் நடிகை குஷ்பு இணைந்தது பலம்தான். தமிழக சட்டசபைத் தேர்தலில் தலைமை வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்.

7.5% இடஒதுக்கீட்டில் ஆளுநர் ஒப்புதல் தராமல் தாமதம் செய்வது ஒரு விஷயமே அல்ல. கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால் பாஜகதான் போட்டியிடும் என்றார் நயினார் நாகேந்திரன்.

கன்னியாகுமரி இடைத்தேர்தல்... களப்பணியில் காங்கிரஸ்.. விஜயதரணிக்கு விட்டுக்கொடுப்பாரா விஜய்வசந்த்..?கன்னியாகுமரி இடைத்தேர்தல்... களப்பணியில் காங்கிரஸ்.. விஜயதரணிக்கு விட்டுக்கொடுப்பாரா விஜய்வசந்த்..?

கூட்டணி கட்சி

கூட்டணி கட்சி

கன்னியாகுமரி எம்பி தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக விட்டு கொடுத்தது. இந்த நிலையில் அதன் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் இறந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் ஒரே ஒரு எம்பியை கொண்ட அதிமுக கன்னியாகுமரி தொகுதிக்கு ஆசைப்பட வாய்ப்பிருக்கிறது. பாஜகவோ இப்படி கறாராக தங்கள் கட்சிதான் இடைத்தேர்தலில் போட்டியிடும் என தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

அது போல் தமிழக பாஜக தலைவர் எல் முருகன், சட்டசபை தேர்தலில்தான் போட்டியிட மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால் மாநிலத் துணைத் தலைவரோ தலைமை வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் என்கிறார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அப்போது பாஜக தலைவராக இருந்த போதும் இப்படித்தான் நிர்வாகிகளுக்குள் ஒற்றுமையின்மை நிலவியது.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

தற்போதும் தலைவர் ஒன்று கூறுகிறார், துணை தலைவர் மற்றொன்று கூறுகிறார். இதனால் தமிழக பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் ஆளுநர் கால அவகாசம் எடுத்துக் கொண்டது போதும் என தலைவர் எல் முருகன் கூறியுள்ளார். ஆனால் நயினாரோ, 7.5% இடஒதுக்கீட்டில் ஆளுநர் ஒப்புதல் தராமல் தாமதம் செய்வது ஒரு விஷயமே அல்ல என கூறியுள்ளார். அனைத்தும் முரண்களாகவே உள்ளன.

English summary
TN BJP Deputy President Nainar Nagendran says that Kushboo in BJP is strength for the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X